சென்னை: விஜய்யின் லியோ படம் ஒரு எல்சியு என்று உதயநிதி ஸ்டாலின் போட்ட டிவீட் விஜய் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் நாளை லியோ திரையிடப்படவுள்ளது. விஜய் படங்களிலேயே மிகப் பெரிய அளவில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும், ஏற்படுத்திய படம் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஏதாவது ஒரு பரபரப்பும் சலசலப்பும் இருந்து கொண்டே இருக்கிறது.
ஒரு படத்துக்கு இத்தனை பிரச்சினைகளா என்று அனைவரும் மலைத்துப் போகும் அளவுக்கு ஏகப்பட்ட தடைகளைத் தாண்டி நாளை திரைக்கு வருகிறது லியோ. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. டிரைலரும் பட்டையைக் கிளப்பி விட்டது. பக்காவான லோகேஷ் கனகராஜ் படமாக இது இருக்கும் என்று உறுதியாக நம்பப்டுகிறது. அதேசமயம், இந்தப் படம் எல்சியூவா இல்லையா என்ற குழப்பமும் இருந்து வந்தது. அதை இன்று அதிகாலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீர்த்து வைத்து விட்டார்.
அதிகாலை 2.25 மணிக்கு ஒரு டிவீட் போட்டு விட்டு போயுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதுதான் இப்போது சரவெடியாக டிவிடட்ரில் வெடித்துக் கொண்டுள்ளது. அதில் என்ன சொல்லியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்றால்...
தளபதி நடிகர் விஜய் அண்ணாவின் லியோ.. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அருமையான இயக்கம், அனிருத் இசையமைப்பு, அன்பறிவு மாஸ்டர், 7ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு.. எல்சியூ.. அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் படத்தைப் பார்த்து விட்டார் என்று தெரிகிறது. இதனால்தான் இத்தனை உற்சாகமாக அவர் அதிகாலையிலேயே ட்வீட் போட்டுள்ளார் என்று ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். படம் எல்சியூ என்பதை உதயநிதியே போட்டு உடைத்து விட்டதால் இதில் யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்ற அடுத்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது..!
கமல்ஹாசனா, கார்த்தியா, சூர்யாவா.. யார் விஜய்யுடன் படத்தில் இடம் பெறப் போகிறார் என்பது மிகப் பெரிய ஹைப்பாக மாறியுள்ளது.. ஆக மொத்தம் விஜய் ரசிகர்கள் யாருமே இப்போது தரையில் இல்லை.. பத்து அடி உயரத்தில்தான் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.. என்ஜாய் என்ஜாய்!
கும்மிருட்டில் மூழ்கிய சென்னை.. பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் ஹேப்பி!
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. பாக். தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள் கள்ள அமைதி ஏன்?.. சீமான்
தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து.. கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்.. டாக்டர் ராமதாஸ்
2 மாதங்களில் 5 தற்கொலை.. எப்போதுதான் ஒழியும்.. உயிர்க்கொல்லி நீட் தேர்வு?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
High BP: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி கை கொடுக்கும்.. எப்படி தெரியுமா?
Liver health: உங்கள் கல்லீரலை பாதிக்கும் மூன்று உணவுகள்.. இதை தவிருங்கள் மக்களே!
ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?