சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர்.. அவரது படங்களிலேயே மிகப் பெரிய ஹிட் இதுதான் என்று நாலா திசைகளிலிருந்தும் பாசிட்டிவான ரெவ்யூஸ் வர ஆரம்பித்துள்ளது.
இந்த விமர்சனங்கள் எல்லாம் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலிருந்து வரும் விமர்சனங்கள்.. அங்கேயே விஜய் படம் மெகா ஹிட்டடித்து விட்டதால், தமிழில் பட்டையைக் கிளப்பும் என்று விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.
லியோ இன்று காலை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட்களுக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருந்தது. பல வருடங்களில் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்துக்கு இந்த அளவுக்கு கிராக்கி ஏற்பட்டது லியோவுக்குத்தான் என்று திரையுலகினர் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு பிரமாண்ட எதிர்பார்ப்பு மற்றும் கிராக்கியுடன் இன்று அதிகாலையிலேயே தமிழ்நாடு தவிர அனைத்துப் பகுதிகளிலும் வெளியானது லியோ.
லியோவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக இதை பிளாக்பஸ்டர் என்று கூறி வருகின்றனர். விமர்சகர்களும் பாசிட்டிவான ரெவ்யூஸ் அளித்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் முதல் பாதி அனல் பறப்பதாக சொல்கிறார்கள். விஜய் வெறித்தனமாக விளையாடியுள்ளார். அவரது அனல் பறக்கும் நடிப்பும், சண்டைக் காட்சிகள் பிரமிக்க வைப்பதாக உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
லோகேஷ் கனகனராஜ் மிகப் பெரியஅளவில் மிரட்டியுள்ளார். அதை விட முக்கியமாக அனிருத்தின் இசை அடித்து நொறுக்கியுள்ளதாம். விஜய்க்கு இது கெரியர் பெஸ்ட் படம் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் அமையும் என்றும் சொல்கிறார்கள்.
தமிழ் ரசிகர்களின் தீர்ப்புக்காக காத்திருப்போம்.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}