- சங்கமித்திரை
சென்னை: லியோ படத்துக்கான சென்சார் முடிந்து விட்டது. படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் லியோ. படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்கனவே உள்ளது. படத்தின் கதை எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது மட்டுமல்லாமல் பாடல்களும் கூட பேசப்படுகின்றன.
ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி விட்ட நிலையில் பட்டையைக் கிளப்பும் வகையில் டிரைலரும் வெளியாகப் போகிறது. இந்த நிலையில் தற்போது படத்துக்கு சென்சார் முடிந்து விட்டது. யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
யு ஏ சான்றிதழ் என்றால் என்ன?
யு சான்றிதழ் ஒரு படத்துக்குக் கிடைத்தால் அந்தப் படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பார்க்கலாம். அதுவே ஏ சான்றிதழ் என்றால் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய படமாகும்.
யுஏ என்றால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனியாக இல்லாமல் பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் துணையுடன் பார்க்கக் கூடிய படம் என்று அர்த்தம். அதாவது படத்தில் வன்முறைக் காட்சிகள் அல்லது ஆபாசக் காட்சிகள் அதிகம் இருந்தால் இந்த சான்றிதழ் தருவார்கள்.
விஜய் படத்தில் ஆபாசம் இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், இதில் ரத்தக்களறியான காட்சிகள் அதிகம் இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால்தான் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}