Leo: மொத்தப் படமும் "லீக்" ஆயிருச்சு.. பிளாக்கில் டிக்கெட்.. பகீர் ரிப்போர்ட்!

Oct 19, 2023,12:23 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகளையும், தடைகளையும் தாண்டி வெளியான லியோ இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தைப் பார்க்க பல ஊர்களில் தியேட்டர்களில் ரசிகர்கள் அதிக விலை கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிய கதையும் வெளியாகியுள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று  திரையிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த் ,மன்சூர் அலிகான் ,கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.




இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்புடன்  காத்திருந்தனர். அதனால் எப்படியாவது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் லியோ பட  வெளியீட்டிற்கு பல கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டன. ரசிகர்கள்  தியேட்டர்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. லியோ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கும் தமிழக அரசு பல உத்தரவுகளை வழங்கியது. 


பிளாக் டிக்கெட்


இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் படம் திரைக்கு வந்தது. ரசிகர்கள் படத்தை இன்றே பார்த்து விட வேண்டும் என்ற வெறியில் பிளாக்கில் அதிக  கட்டணம் கொடுத்து விலைக்கு வாங்கிப் பார்த்துள்ளது தெரிய வந்துள்ளது. ரூ. 1,500, ரூ. 2000 என்றெல்லாம் காசு கொடுத்து பிளாக்கில் பலர் டிக்கெட் வாங்கியுள்ளனர். 


பல ஊர்களில் தியேட்டர்களில் இதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. டிக்கெட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் புகார் தர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தொலைபேசி எண்களை அறிவித்திருந்தனர். அதில் ஏதாவது புகார் வந்ததா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.


இணையத்தில் வெளியானது


இதற்கிடையே, லியோ முழுப் படமும் இணையத்தில் வெளியாகி விட்டது. வழக்கமாக புதுப் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்கள்தான் இதையும் வெளியிட்டுள்ளன. மேலும் டெலிகிராம் சானல்களிலும் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர். இதனால் படக் குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.


இப்படித்தான் ஒவ்வொரு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போதும் புதுப் படங்களை மொத்தமாக இணையத்தில் வெளியிட்டு விடுவது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்