சென்னை: அரசு அறிவித்தபடி லியோ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. லியோ படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் லியோ. 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார் லலித் குமார். லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் லியோ வெளியாக இருக்கிறது. லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி காட்சிக்குப் பதில், 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. காலை 7 மணி காட்சியை அனுமதிக்க தமிழ்நாடு அரசு மறுத்து விட்டது. இந்நிலையில், தியேட்டர்களும் காட்சிகளின் நேரத்தை மாற்ற முடியாது என்ற நிலையில்,வேறு வழியில்லாததால் திட்டமிட்டபடி படத்தைத் திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
லியோ படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், குழப்பம் நீங்கியதால் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. லியோ விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான படம் என்ற நிலையில் தமிழகம் முழுவதிலும் விஜய் ரசிகர்கள் வருங்கால முதல்வர் என்றே போர்ஸ்டர் அடித்து லியோ பட ரிலீஸ்சுக்கு என்றி கொடுத்து வருகின்றனர்.
படம் குறித்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு படம் வெளிவருவதற்கு முன்னரும், பட ரிலீஸ்சிலும் சர்ச்சைகளும் பஞ்சமே இல்லை எனலாம். லியோ பட ரிலீசில் விதி மீறல்கள் இருந்தால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் அதிகாரிகள் இப்போதே நடவடிக்கையில் இறங்கி விட்டனர். ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவித்து வருகின்றனர்.
ஒரு பட ரிலீசில் இந்தளவு பிரச்சனை இருப்பதால்,விஜய் ரசிகர்களை விட பொது மக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டிக்கெட் முன்பதிவு நடத்து வருகின்ற நிலையில் முன்டியடித்துக் கொண்டு டிக்கட் வாங்கி வருகின்றனர். படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ரசிகர்களே.......!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}