சென்னை: லியோ படத்தின் முதல் ஷோவை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பு குழு
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் லியோ. 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார் லலித் குமார். லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் லியோ வெளியாக இருக்கிறது.
லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளை அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு திரையிட அனுமதி கேட்டு பட தயாரிப்பாளர்கள் அரசுக்கு விண்ணப்பம் அனுப்பினர். ஆனால், ஒரு மாதம் அமைதியாக இருந்த அரசு தரப்பு 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. ஆனால், முதல் காட்சி 9 மணிக்குத்தான் என்று அரசு கூறி விட்டது.
மேலும் இறுதிக்காட்சியை இரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் கூறியதால் படக் குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியாகி விட்டனர். இந்த நிலையில், லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி காட்சிக்குப் பதில், 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முறையீடு செய்துள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}