Leo Trailer Review: விஜய்யின் லியோ டிரைலர் எப்படி இருக்கு..?

Oct 05, 2023,08:00 PM IST

சென்னை : விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்த விஜய்யின் லியோ பட டிரைலர் இன்று (அக்டோபர் 05) வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் லியோ டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலர் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த டிரைலரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ,ரசித்துள்ளனர்.


பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே கதை என்னவாக இருக்கும், படம் எப்படி இருக்கும் என்பது தான் ஹாட் டாக்காக இருக்கும். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கும் கூட இதை நிலை தான். ஆனால் லியோ படத்திற்கு மொத்தமாக நிலைமையே வேறு. இது லோகேஷ் கனகராஜ் படம் என்பதை தாண்டி விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான ஆரம்ப படம் என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கினர். அதற்கு காரணம் படத்தின் டைட்டில் சிங்கம் என பொருள் தரும் வகையில் இருப்பது, படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் என அனைத்தும் விஜய்யை மாஸ் ஹீரோ என்பதை தாண்டி தலைவராக பார்க்க வைத்தது.


வாயடைச்சுப் போச்சே




ரசிகர்களின் இந்த எண்ணத்தை வலுவாக்கும் வகையில் ஃபர்ஸ்ட் சிங்கிளில் நான் ரெடி தான் வரவா என்ற வரிகள், செகண்ட் சிங்கிளில் பெரும் புள்ளிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி என்ற வரிகள் ஆகியன சினிமா என்பதை தாண்டி அரசியல் கண்ணோட்டத்தில் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் டிரைலரிலும் அரசியல் பஞ்ச் ஏதாவது இருக்கும், அரசியல் கட்சிகளுக்கு ஏதாவது செமேஜ் விஜய் சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் அனைவரையும் வாயடைந்து போக செய்யும் அளவிற்கு டிரைலரிலேயே மிரட்டி உள்ளார் லோகேஷ் கனகராஜ். டிரைலரின் ஆரம்பத்தில் பனி படர்ந்த காஷ்மீரின் அழகை மின்னல் வேகத்தில் காட்டி விட்டு, அதற்கு பிறகு எதை பார்ப்பது எதை விடுவது என தெரியாத அளவிற்கு அடுத்தடுத்த ஷாட்களில் அதிரடி ஆக்ஷன்கள், துப்பாக்கி சத்தம், ரத்தம் என மிரட்டி உள்ளார்கள். டிரைலரை பார்க்கும் அனைவருக்குமே, "என்னடா லியோ டிரைலருனு சொல்லி ஹாலிவுட் பட டிரைலரை காட்டுறீங்க" என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். 


இது ஹாலிவுட் படம் மாதிரில்லே இருக்கு




ஒரு விஜய்க்கு பதிலாக இன்னொரு விஜய்யையும், அவரது குடும்பத்தை கொல்லுவதற்கு வில்லன்கள் கூட்டம் துரத்துகிறது. அவர்களிடம் இருந்து விஜய் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் லியோ படத்தின் கதை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. மற்றபடி வழக்கமான லோகேஷ் படத்தில்  இருப்பது போல் சஞ்சய் தத், அர்ஜூன் என ஒரு பெரிய வில்லன் கூட்டம் உள்ளது. கெளதம் மேனன் வழக்கமான அதிரடி காட்டும் போலீசாக வருகிறார். த்ரிஷாவை அழகாகவும், அழுத்தமாகவும் காட்டி உள்ளார்கள். அனிருத் பேக்கிரண்ட் இசையில் வேற லெவலில் பட்டையை கிளப்பி உள்ளார்.


லியோ படத்திற்கு சென்சாரில் யுஏ சான்று வழங்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள். ஆனால் டிரைலருக்கு இடையில் விஜய் பேசும் அந்த கெட்ட வார்த்தை, சிகரெட் பிடிக்கும் காட்சிகளை எப்படி அனுமதித்தார்கள் என்று தான் தெரியவில்லை. வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் ரசிக்கும்படியாக உள்ளது. டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டிரைலரின் இறுதியிலாவது அதிரடி பஞ்ச் காட்டி முடிப்பார்கள் என்று பார்த்தால் ரத்தத்தால் லியோ என்ற நாணயம் நனைவது போலவும், Rest in Peace என சொல்லி முடிக்கிறார்கள். யாருக்கு என்று தான் தெரியவில்லை.


அதிரடி அதிரடி அதிரடி மட்டுமே




மின்னல் வேக டிரைலர் விஜய் ரசிகர்களை அதிரடி ஆக்ஷனில் கவர்ந்துள்ளது. அதே சமயம் விஜய்யின் டான்ஸ், விஜய் - த்ரிஷா ரொமான்ஸ், விஜய்யின் பஞ்ச் என எதுவும் இல்லாமல் உள்ளது ரசிகர்களை சற்று ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. டிரைலரிலேயே இது லோகேஷ் கனகராஜ் படம் தான் என காட்டி விட்டார்கள். டிரைலரை போல் படமும் ரசிகர்களை கவர்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கெளதம் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 


ரிலீஸ் தேதி நெருங்குவதால் அதற்கு முன் ஆடியோ ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி தயாரிப்பு நிறுவனம் அந்த விழாவை ரத்து செய்தது. ஆடியோ விழா தான் இல்ல...டிரைலரையாச்சும் சட்டுபுட்டுன்னு வெளியிடுங்கப்பா என ரசிகர்கள் ஆவலாக கேட்டதால் இன்று டிரைலரை வெளியிட்டுள்ளனர். லியோ டிரைலர் ரிலீஸ் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு நேற்றிலிருந்தே எக்ஸ் தளத்தில் #LeoTrailerDay, #LokeshKanagaraj, #ThalapathyVijay உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்து வந்தன. இப்போது ரசிகர்கள் தீபாவளியை இப்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்