சென்னை: லியோ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எதிர்பாராத விதமாக ரத்து செய்யப்பட்டு விட்டதால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் 2வது சிங்கிள் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. ஏற்கனவே முதல் பாடலும் பெரும் வரலாறு படைத்தது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸை வெளியிட்டுள்ளது பட நிறுவனம். லியோ படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களது ஆர்டர் தயாராகிக் கொண்டிருக்கிறது. உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. உங்க விருந்தை சாப்பிட்டு மகிழ ரெடியாகுங்க என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சமூக வலைதளமெங்கும் லியோ டிரெய்லர் குறித்த பதிவுகள் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளன. ஆடியோ லான்ச் விழாவில் மிஸ் ஆன தீப்பொறியை இந்த டிரெய்லரில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}