முட்டாளாக்கத் தேவையில்லைங்க.. ஜாலியா கொண்டாடுவோம்.. ஏப்ரல் 1ஐ!

Apr 01, 2026,04:03 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


ஏப்ரல் 1 என்றால் நம் நினைவிற்கு வருவது April Fool. சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நாம் அனைவரும் April Fool சொல்லி விளையாடியது நினைவிற்கு வரும் .இப்படி சிறப்பு வாய்ந்த முட்டாள் தினத்தை கொண்டாடிடுவோம்.


முட்டாள்கள் நாள் (April Fools' Day or All Fools' Day) என்பது ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் ஒரு நாளாகும்.


இந்த நாளில் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்து விளையாடுவது மன மகிழ்ச்சியை தருகிறது.  இந்த நாள் 19-ஆம் நூற்றாண்டு முதல் அறியப்பெற்றதாக இருந்தாலும் இன்றைய நாள் வரை நாம் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.


ஏப்ரல் 1  முட்டாள்கள் தினம் என்று சிறப்பு தினம் இல்லை என்றும் கூறுவார்கள். அப்படி நாம் கருதாமல் இன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாடுவதே நல்லது என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.


இன்றைய தினத்தில் வயது வித்தியாசம் பார்க்காமல் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி அவர்களை முட்டாள்கள் என்று சொல்லி அழைப்பதில் நமக்கு சந்தோசம் பொங்கி வழிகிறது. இதற்காகவே நாம் ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் இன்றைய நாளை கொண்டாட வேண்டும் .




மார்ச் 31 அன்று வங்கிகளில் பழைய கணக்குகளை சரிபார்த்து ஏப்ரல் 1 அன்று புதிய கணக்குகளை எழுதுவார்கள். இதனால் உலகம் முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை பார்க்கும் பள்ளி குழந்தைகள் தங்களுக்கு மட்டும் விடுமுறை இல்லையா என்று ஏங்கி காணப்படுவார்கள்.


அந்த கவலையை மறப்பதற்கு April Fool சொல்லி ஏமாற்றி விளையாடுவதில் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்கள்.


April Fool அனுபவங்கள் :


ஏய் உன் சட்டை கிழிந்து இருக்கு பாரு என்று சொன்னதும் பயந்து போய் பார்ப்போம். உடனே பதில் April Fool.


இன்று பள்ளிக்கு கணித ஆசிரியர் வரவில்லை. -April Fool


அங்கே பாரு பாம்பு -April Fool


சாக்லேட் கவரில் சாக் பீஸ் போன்ற ஏதேனும் ஒரு பொருளை வைத்து மடித்துக் கொடுத்து ஏமாற்றுவது - April Fool.


இதைப் போல் நிறைய நிகழ்வுகளாக குழந்தைகள் யோசித்து தானாகவே தங்கள் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும்  ஏமாற்றி விளையாடுவது புத்துணர்ச்சி அளிக்கிறது.


இப்படி ஏமாற்றி விளையாடும் பொழுது சிலர் எதற்கும் நம்பாமல் தன்னை April Fool சொல்லி விடுவார்கள் என்று அறிவாக செயல்படுபவரும் இருப்பார்கள். அவர்களை நாம் இன்றைய நாள் ஏமாற்ற முடியாது. அப்பொழுது நாம் தான் ஏமாந்து விடுவோம். நமக்கே அது April fool ஆக முடிந்து விடுகிறது .


இந்த நாளை சிறப்பாக அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில்  தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)

news

டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !

news

எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?

news

தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??

news

பிரியாணிக் காதல்!

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்