- க.யாஸ்மின் சிராஜூதீன்
விளையும் பயிர்
முளையிலே தெரியும் என்பர்..
பயிர் என்பது விவசாயம் மட்டுமல்ல....
நம் இளைய தலைமுறையும் தான்....
பயிர் செழிக்க உரமிடுவோம் ..
இளைய தலைமுறை செழிக்க...
நல்ல சிந்தனைகளை விதைப்போம் ....
நாட்டுக்காக வாழ்ந்த தன்னலமற்ற தலைவர்களை
எடுத்துக்காட்டாக எடுத்துக் கூறிடுவோம்.....
விளையும் பயிர்களை முளையிலே சீராக்குவோம்...
விளையும் பயிர் முளையிலே
விதைக்காய் பிஞ்சிலே
என்பது பழமொழி.. ..

விளையும் பயிர்கள் உயிர் காக்கும்...
இளைய தலைமுறை நாட்டைக் காக்கும்...
காண்பதையும்
கேட்பதையும் போலச்செய்வர்
இளம்பருவத்தினர்....
மூத்தோர் இளையோர் முன் கண்ணாடி..
மூத்தோர் சிறந்த வழிகாட்டிகள்...
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய முடியும்...
நல்லதை விதைப்போம்
வளம்பேறுவோம்..
விளையும் பயிர்
வீரத்தையும்
ஒற்றுமையையும்
பொறுமையையும்
பொறுப்பையும்
அன்பையும்
ஊட்டச்சத்தாக உண்டு செழித்தோங்க வேண்டும்...
உயிர்கள் இன்புற்று வாழ
அதற்கு உறுதுணையே
நம்தூண்டுகோல்..
மனதில் பதிய வைப்போம்
சிறந்ததை...
வாழவைப்போம்
வளமுடன் நலமுடன்
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}