வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!

Jul 23, 2025,06:46 PM IST

சென்னை: சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. 2025 ஆகஸ்ட் 2 ஆம் தேதி வானில் ஒரு அதிசயம் நிகழும் என்று சொல்கிறார்கள். இது வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த அதிசயம் 2027 ஆம் ஆண்டு தான் நிகழப்போகிறது. 


மக்கள் 2025 ஆம் ஆண்டுக்காக ஆர்வமாக இருந்த நிலையில், இது 2027 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு என்பதை தெரிந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும், இது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான். காரணம், பூமியிலோ அல்லது வானிலோ எந்த விஷயம் நடந்தாலும் அது தற்போது வாழும் மனிதர்களுக்கு அதிசயமான விஷயம்தான்.. அதை அனுபவிக்க நாம் நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதால் இதுபோன்ற அதிய நிகழ்வுகளை நாம் மிஸ் செய்யாமல் பார்த்தும், உணர்ந்தும் அனுபவிக்கத் தவறக் கூடாது.


NASA வெளியிட்டுள்ள தகவல்படி, வருகிற ஆகஸ்ட் 2ம் தேதியன்று சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பில்லை. இதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 


சரி ஏன் இந்த சூரிய கிரகணம் குறித்து மக்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? 




இதற்கு காரணம் இருக்கிறது. 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது 1991 முதல் 2114 வரையிலான காலகட்டத்தில் நடந்த சூரிய கிரகணங்களிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கப் போகிறது. இதனால்தான் உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள் இதற்காக தயாராகி வருகின்றனர். மக்களுக்கும் ஆர்வம் பெருகியுள்ளது.


அதேசமயம், இந்த சூரிய கிரகணம் பற்றி குழப்பம் வேண்டாம். 2027 ஆம் ஆண்டு வரப் போகும் இந்த சூரிய கிரகணம், ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தெரியும். இது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும். மற்ற சூரிய கிரகணங்களை போல இது இருக்காது. இந்த கிரகணம் 6 நிமிடம் 23 வினாடிகள் வரை நீடிக்கும். இதுவே மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கும். எனவே இது நிச்சயம் ஒரு மேஜிக்கல் மொமன்ட்தான்.


எனவே,  பொறுமையாக இருப்போம்.. 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிகழும் இந்த வானியல் நிகழ்வை காண தயாராவோம். அதேசமயம், இந்தியாவில் இது தெரியாது என்பதால் நாம் இதை மிஸ் செய்யப் போகிறோம் என்பது சற்று ஏமாற்றம்தான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலைம மையம்!

news

குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?

news

மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

news

TNPSC குரூப் 4 தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: அண்ணாமலை

news

தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!

news

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!

news

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மதுரை ஆதினத்தை துன்புறுத்தக்கூடாது: அண்ணாமலை

news

வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்