புனித சனிக்கிழமையின் அமைதி மற்றும் எதிர்பார்ப்பு!

Apr 04, 2026,12:50 PM IST

- முனைவர் கோ. லதா


சிலுவை மரணம் முடிந்தது 

பாடுகள் எல்லாம் அடங்கியது

கல்லறை வாசல் அடைக்கப்பட்டது

இயேசுவின் உடல் ஓய்வெடுத்தது

இயற்கை எல்லாம் மௌனமானது 

உலகம் சோகத்தில் ஆழ்ந்தது

சீடர்களின் உள்ளம் கலங்கியது

நம்பிக்கை நாடி துடித்தது

அமைதி தவழும் நன்னாள்

அதிசயம் நடக்கும் முன்னாள்

காத்திருப்பு தவம் போல

கண்ணீரில் நனைந்த வேளை

மறைபொருள் உரைத்த காலம்

மண்ணில் இறங்கிய மௌனம் 

தேவன் நித்திரையில் ஆழ்ந்திருக்க

படைப்பு விழித்திருந்து ஏங்க

கல்லறை மூடிய கல்லை நோக்கும்

விடியலை நோக்கி உள்ளங்கள் ஏங்கும்

உயிர்ப்பு செய்தி அறியும் ஆவல்

உள்ளத்துள் ஓடும் அக்கினி தழல்

மூன்று நாளில் உயிர்த்தெழுவார்

வார்த்தையை நிறைவேற்றிக் காட்டுவார்

சாவு வென்ற தேவன் வருவார்

புனித சனிக்கிழமை அதுவாகும்.!!




புனிதச் சனி - மௌனக் காத்திருப்பு... !


சிலுவைப் பாடுகள் ஓய்ந்த நேரம்

சிந்தை கலங்கி நின்ற காலம்

கல்லறை வாசல் மூடிய கல்லை

கண்ணீர் சிந்தும் கவலைக் காலை

அமைதி காக்கும் புனிதச் சனியாம்

அகிலம் தவழும் மௌன நதியாம்

துயரம் தீர்க்க துயிலும் தேவன்

தூயஅன்பு காட்டும் இறைவன்

மறைப்பொருள் தேடும் மக்கள் கூட்டம்

மனதில் பெருகும் ஆசை வாட்டம்

பயத்தில் நின்ற சீடர் நெஞ்சம்

படைத்த இறைவன் பாதம் தஞ்சம்

மரணப் பிடியில் மௌனம் இங்கே

மண்ணின் மீட்பு தொடங்கும் அங்கே

விடியல் தேடும் விண்மீன் போல

விரைந்து வருவார் உயர்த்துக் கோல

உரைத்த வார்த்தை உண்மை வெல்லும்

உயிரின் பயத்தை அடியோடு கொல்லும்

இருளை நீக்கும் ஒளிவிளக்குத் தோன்றும்

இன்பம் எங்கும் இனிதே நிறையும் 

காத்திருப்போம் விடியும் நாளைக் காலை

கர்த்தர் வருவார் போக்கும் கவலை

சாவை வென்று சாட்சியாய் வருவார்

சகல உயிருக்கும் சாவாமை தருவார்!!


மௌனத்தவம்...      

           

சிலுவைப் பாடுகள் ஓய்ந்த நேரம்

சிந்தை கலங்கி நின்ற காலம்

கல்லறை வாசல் அடைத்த கல்லை

கண்ணீர் சிந்தும் கவலை காலை

மௌனம் காக்கும் புனித சனியாம்

மண்ணில் தவழும் அமைதி நதியாம்

பாடுகள் எல்லாம் நீங்கியே தேவன்

படைப்பை மீட்கத் துயிலும் இறைவன்

சீடர்கள் உள்ளம் நடுக்கம் கண்டே

சிதறி நின்றார் பயத்தில் அங்கே

நம்பிக்கை விளக்கு அணைந்தே போக

நிம்மதி தேடி மக்கள் ஏங்க

அதிசயம் காக்கும் மௌனப் பொழுது

அமைதி தந்தது இறைவனின் எழுத்து

மரணப் பிடியில் மௌனம் இங்கே

மண்ணின் மீட்பு நடக்கும் அங்கே

விடியல் தேடும் விண்மீன் போல

விரைந்து வருவார் உயர்த்துக் கோல

மறையான் உரைத்த வார்த்தை வெல்லும்

மரணத்தின் பயத்தை அடியோடு கொல்லும்

உயிர்ப்பின் செய்தி தேடும் உள்ளம்

உண்மை விளங்கும் மகிழ்ச்சி வெள்ளம்

காத்திருப்போம் விடியும் காலையிலே

கர்த்தர் வருவார் மேன்மையிலே!!!


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்