மும்பை: எல் ஐ சி இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை தேர்வு செய்யும் ஆப்ஷனைக் கூட இந்தியில்தான் வைத்துள்ளனர்.
எல் ஐ சி இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஆயுள் காப்பீடு அல்லாத வணிகப் பரிவர்த்தனைகளையும் செய்கிறது. இதன் சேவைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. இதில் தனிநபர் காப்பீட்டுக் கொள்கைகளில் மருத்துவக் காப்பீடு, விபத்து, சொத்து மற்றும் வாகனக் காப்பீடு என பல்வேறு கவரேஜ் பாலிசிகள் அடங்கி உள்ளன. எல்ஐசி பாலிசி இல்லாத வீடே இல்லை என்று கூறலாம்.

அதேபோல் தொழில்துறை இன்சூரன்ஸ் பாலிசிகள் திட்டம், கட்டுமானம், ஒப்பந்தங்கள், தீ, உபகரணங்கள் இழப்பு, போன்றவற்றுக்கான கவரேஜை வழங்குகிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் எதிர்கால கனவுகளை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனத்தில் கணக்கு வைத்து பயன் அடைந்து வருகின்றனர். இதற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எல்ஐசியின் இணையதளம் முழுக்க முழுக்க இந்திக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தி மொழியை மாற்றம் செய்ய भाषा என்ற பட்டனை அழுத்தி தேர்வு செய்தால் மட்டுமே LIC பக்கம் ஆங்கில மொழிக்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியை மாற்றம் செய்வதற்கு முதலில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இந்தி தெரியாதவர்களுக்கு பெரும் திண்டாட்டமாகியுள்ளது.
இந்தி தவிர ஆங்கிலம் மற்றும் மராத்தியில் இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். இந்த இந்தி மாற்றத்துக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது. ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் "பாஷை" என்று எழுதியிருக்கிறார்கள். எல். ஐ. சி யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் நாம் ஒரு மொழியை மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தால், அதே மொழியில்தான் தளம் வருகிறது என்பது சற்று ஆறுதலாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}