சென்னை: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆரம்பத்திலிருந்தே டிரெண்டிங்குகள் மிகத் தெளிவாக உள்ளன. எந்தக் குழப்பமும் இல்லாமல் மக்கள் வாக்களித்திருப்பதையே இது காட்டுகிறது. தொடக்கம் முதல் பெரிய அதிர்ச்சியோ, சர்ப்பிரைஸோ இல்லாமல் அழகாக போய்க் கொண்டிருக்கிறது தமிழ்நாடு டிரெண்ட்ஸ்.
தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் உள்ளார்.
பாஜக கூட்டணியில் பாஜக எந்த இடத்திலும் லீடிங்கில் இல்லை. மாறாக, பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரியில் முன்னிலையில் இருந்து வந்தார். தற்போது அவரும் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக தனித்து எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை என்பது அந்தக் கட்சியினரை அதிர வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் இருந்தார். தற்போது அவரும் பின்னுக்குப் போய் விட்டார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையிலும் அதே போக்கு நீடிக்கிறது. கடந்த முறை தமிழ்நாட்டில் மொத்தம் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. கடந்த முறை தேனியில் மட்டும் தோற்றது. தற்போது அன்று விட்டதையும் சேர்த்து இந்த முறை திமுக கூட்டணி பெறவுள்ளது.
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
{{comments.comment}}