சென்னை: லியோ திரைப்படத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. டிரைலரில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் நீக்கப்பட்டு விட்டது. விஜய் சிறப்பாக நடித்துள்ளார் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது லியோ திரைப்படம். விஜ்ய, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை உலகம் முழுவதும் லியோ திரைக்கு வருகிறது. அட்வான்ஸ் புக்கிங்கில் மிகப் பெரிய வரலாற்றை ஏற்கனவே லியோ படைத்து விட்டது.

இந்த நிலையில் லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் படம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்களின் சுருக்கம்:
விஜய் படம் சிறப்பாக வந்துள்ளது. விஜய் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இயக்க விட்டார். இதனால் படம் முழுக்க என்னுடைய படமாக வந்துள்ளது. விஜய் சார் சிறப்பாக நடித்துள்ளார்.
டிரைலரில் இடம் பெற்ற வார்த்தை படத்தில் இருக்காது. அதை நீக்கி விட்டோம். படத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நன்றாக வந்துள்ளது. அனைவரும் ரசித்துப் பார்க்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.
அடுத்து ரஜினிகாந்த் படத்த இயக்கவுள்ளேன். அதை விட பெரிய மகிழ்ச்சி இல்லை என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
மா(மே)ரியம்மாள் பவனம்.. ஒரு நிமிடக் கதை (19)
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
என் தமிழ்.. ஏன் தமிழ்?
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
மிளகு பொங்கல் வாசம் மிடுக்காய் பரவி வீசும் பலகாய்கறி சாம்பார் படக்கென பசி தூண்டும்!
{{comments.comment}}