டெல்லி: மொத்த உலகின் பார்வையும் இந்தியாவின் மீது படிந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்படவுள்ளன. இதற்கான ஏற்படுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. இந்தியா முழுவதும் 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.
பிரமாண்ட ஜனநாயகத் திருவிழா:
உலக அளவில் மிகப் பெரிய அளவிலான தேர்தல் திருவிழா என்றால் அது இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தல்தான். இந்தியாவில்தான் அதிக அளவிலான வாக்காளர்கள், ஜனநாயக முறைப்படி வாக்களிக்கிறார்கள் என்பதால் இந்தியத் தேர்தல் எப்போதுமே உலகின் கவனத்தை ஈர்க்கும்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் அனைத்து மையங்களிலும் தொடங்கும். தமிழகத்தில் மட்டும் 39 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்:
வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சார வழங்க வேண்டும் என்றும், அனைத்து செயற் பொறியாளர்களும் இதை உறுதி செய்ய வேண்டும் என்றும், துணை மின் நிலையங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி நாம் சந்தித்தோம். இப்போது வாக்கு எண்ணிக்கை சமயத்தில் சந்திக்கிறோம். தேர்தல் தொடர்பாக இதுவரை இல்லாத வகையில் 100 செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளோம். 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்தி முடித்துள்ளோம்.
நாங்கள் காணாமல் போகவில்லை - தேர்தல் ஆணையர்கள்
தேர்தலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். வீடுகளில் இருந்தப்படியே வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி. 64 கோடி மக்களை வாக்களிக்க செய்து உலக சாதனை படைத்துள்ளோம். தேர்தல் ஆணையர்களை காணவில்லை என சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளியாகின. நாங்கள் இங்கே தான் இருக்கிறோம். உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பெண் வாக்காளர்கள் மட்டும் 31 கோடி பேர் வாக்களித்துள்ளனர். ஜி 7 நாடுகளின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையை விட இந்தியாவில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகமாகும்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி, 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 1,692 வான்வெளி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. 68,793 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டது. 1.5 கோடி தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் கடும் சவால்களை சந்தித்து தேர்தலை நடத்தியுள்ளது. சிலர் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதும் சரியா? தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளால் வெறும் 39 இடங்களில் மட்டுமே மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?: டாக்டர் அன்புமணி
எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அவதூறு பரப்புகிறார்கள்..போற்றுவோர் போற்றட்டும்..புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்..டாக்டர் ராமதாஸ்
மலையாள நடிகை மினு முனீர் கைது.. சிறுமியை தவறாகப் பயன்படுத்தியதாக சென்னையில் புகார்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்
Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?
79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!
{{comments.comment}}