லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளதாம். இந்த முடிவையும் காங்கிரஸ் கட்சிக்கு அது தெரிவித்து விட்டதாம். இதை ஏற்றுக் கொண்டால், ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வாராம்.
எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அங்கிருந்து ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகள் வெளியேறி விட்டன. இருக்கிற கட்சிகளுக்குள்ளும் கூட ஒற்றுமை இல்லை. தொகுதிப் பங்கீட்டிலும் சிக்கல் நிலவுகிறது.
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கு பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாடிக் கட்சி கூட்டணியை விரும்பவில்லை. அதிக தொகுதிகளில் தானே போட்டியிட விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கேட்கிறது.

இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒரு முடிவுக்கு சமாஜ்வாடிக் கட்சி வந்துள்ளதாம். அதாவது காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம். பிற தொகுதிகளில் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டால், ராகுல் காந்தி உ.பியில் நடத்தவுள்ள பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவு் பங்கேற்பாராம். இந்த முடிவு காங்கிரஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பியில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதில் இந்தி பெல்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மிக மிகக் குறைந்த அளவிலான வெற்றியே காங்கிரஸுக்குக் கிடைத்தது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத ஒற்றுமை யாத்திரையானது உ.பியில் நுழையவுள்ளது. அங்கு பாபகாஞ்ச் பகுதியில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பேசவுள்ளனர். அதில் அகிலேஷை கலந்து கொள்ள வைக்க காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.
ஏற்கனவே மமதா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் முரண்டு பிடிக்கிறார். டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்டையைக் கொடுக்கிறது. நிதீஷ் குமார் வெளியேறி விட்டார். ஜம்மு காஷ்மீரிலும் சிக்கல் நீடிக்கிறது. இப்படி இருக்கையில் இப்போது சமாஜ்வாடியும் நெருக்கடி தருவதால் காங்கிரஸ் விழி பிதுங்கி நிற்கிறது.
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}