சென்னை: தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியாகி விட்ட நிலையில் அடுத்தடுத்த ஏற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
ஒரு பக்கம் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மக்களைக் கவரும் அதிரடியான வேலைகளில் அனைவரும் தீவிரம் காட்டியுள்ளனர். ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர்களும் செய்யும் ஜில் ஜில் ஜிகா ஜிகா பிரச்சாரங்களை மக்கள் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
மறுபக்கம் தேர்தல் அலுவலர்கள் தங்களது வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதில் அதிகபட்சமாக கரூரில் 54 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.

ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்களை உள்ளிட முடியும். எனவே தமிழ்நாட்டில் 15 வேட்பாளர்கள் வரை போட்டியிடும் 10 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.
15 வேட்பாளர்களுக்கு மேல் அதேசமயம், 30 வேட்பாளர்களுக்குள் போட்டியிடும் 24 தொகுதிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ள 4 தொகுதிகளில், வாக்குச் சாவடிகளில் தலா 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
கரூல் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இங்கு மட்டும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
விரைவில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட வேண்டிய சின்னத்துடன் கூடிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு அதன் பின்னர் அவை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலும் இதே நாளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}