சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) இளையராஜாவிடம் பேரம் பேசிய விவகாரத்தில், புதிய திருப்பமாக சிங்கப்பூரில் இருக்கும் நபர் ஒருவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் (Look Out Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான இளையராஜாவிடம், தவெக அரசை கவிழ்ப்பதற்காக பெரும் தொகை பேரம் பேசப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் வசித்து வரும் லட்சுமண பெருமாள் என்பவருக்கு இந்த பேரம் பேசும் விவகாரத்தில் நேரடித் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் புலனாய்வு அமைப்புகள் லட்சுமண பெருமாளுக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதைத் தடுக்கவும் அல்லது இந்தியாவிற்குள் நுழையும் போது விமான நிலையங்களிலேயே அவரை கைது செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லட்சுமண பெருமாள் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கு மற்றொரு முக்கிய காரணமும் தற்போது வெளியாகியுள்ளது. அவர் சிங்கப்பூரில் இருந்தபடியே, இந்த குற்றச்சாட்டு மற்றும் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பான பல்வேறு முக்கிய டிஜிட்டல் மற்றும் இதர ஆதாரங்களை திட்டமிட்டு அழித்ததாக அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காவல்துறையின் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவும், வழக்கின் தீவிரத்தைக் குறைப்பதற்காகவும் அவர் இந்த ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டில் இருந்துகொண்டே ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டு லட்சுமண பெருமாள் மீது சுமத்தப்பட்டுள்ளதால், அவரை இந்தியாவிற்கு கொண்டு வந்து நேரில் விசாரணை நடத்த காவல்துறை தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் எப்போது தாயகம் திரும்பினாலும் உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோருக்கு விசாரணைக்கு சம்மன், லுக் அவுட் நோட்டீஸ் ஆகியவை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}