சென்னை : முருகன் படத்தை இளம்பெண் ஒருவர் ஏடாகூடமான இடத்தில் டாட்டூவாக வரைந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றனர்.
உலகில் உள்ள பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருந்து வருபவர் தமிழ் கடவுளான முருகப் பெருமான். உலகில் அதிக கோவில்கள் இருக்கும் ஒரே கடவுள் முருகப் பெருமான் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு உலகின் பல நாடுகளிலும் முருகனுக்கு கோவில்கள் கட்டி, தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருபவர்கள் ஏராளமானோர் உண்டு.

தைப்பூசம், பங்குனி உத்திரம், மஹா கந்தசஷ்டி போன்ற விழாக்கள் தமிழகத்தை விடவும் மிக சிறப்பாக, கோலாகலமாக வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வளவு ஏன் புத்த மற்றும் ஜைன மதத்தை பின்பற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.
சமீப காலமாக முருக வழிபாடு மிகவும் பிரபலமாகி வருகிறது. முருகன் கலியுகத்திலும் பல அதிசயங்கள் புரிவதால், அவரது மந்திரங்களை படித்தால் எப்படிப்பட்ட பிரச்சனையும் தீரும் என்பதால் இளைஞர்கள் பலரும் கந்தசஷ்டி கவசம், வேல்மாறல் போன்ற முருகன் மந்திரங்களை தேடி தேடி படித்து வருகிறார்கள். பழநி, திருச்செந்தூர் போன்ற தலங்களுக்கும் காவடி எடுத்து, பாத யாத்திரை செல்லும் இளைஞர்கள், குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தன்னுடைய வலது பக்க மார்பகத்தில் பழநி முருகனின் உருவத்தை டாட்டூவாக வரைந்து கொண்டுள்ளார். டாட்டூ வரைந்தது மட்டுமல்ல அதை ஓப்பனாக வீடியோவாகவும் பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவை பார்த்த முருக பக்தர்கள் பலர் கொந்தளித்து, அந்த பெண்ணை திட்டி கமெண்ட்கள் பதிவிட்டு வருகின்றனர்.
டாட்டூ போடுற இடமா அது? அதுவும் முருகன் படத்தை அந்த இடத்தில் டாட்டூ போடுவது இந்து கடவுளை அவமதிப்பதாகும் என பலரும் கூறி வருகின்றனர். அந்த பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மத ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை...இன்று முக்கிய முடிவை அறிவிக்க வாய்ப்பு
கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
{{comments.comment}}