- ஸ்வர்ணலட்சுமி
வளர்பிறை சதுர்த்தி 3. 03. 2025 முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாடு செய்ய நினைத்தது எல்லாம் நடக்கும்.
இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள் கூறி, விநாயகரை வழிபாடு செய்து ,நமது பிரார்த்தனை அவர்கள் யாவருக்கும் சென்று அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விநாயகப் பெருமானை நினைத்து எந்த செயல் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரை வழிபட தடைபட்ட செயல்கள் தடையின்றி நடைபெறும் வெற்றி கிட்டும்.
மார்ச் மாதம் 3ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று இரவு சதுர்த்தி திதி 10 :36 வரை உள்ளது. வளர்பிறை சதுர்த்தி திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வருவது மிகச் சிறந்த நாள் ஆகும். இன்றைய தினம் அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய நம் கஷ்டங்கள் யாவும் தீரும்.
கோவிலுக்கு செல்பவர்கள் இரண்டு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட அவரவர்க்கு உள்ள கஷ்டங்கள் விலகி நல்ல காலம் பிறக்க ஆரம்பிக்கும்.
கோவிலுக்கு அபிஷேகப் பொருட்கள், மலர்கள், அருகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சமர்ப்பிக்கலாம். வீட்டில் பூஜை அறையில் விநாயகர் சிலை அல்லது படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவும் .இரண்டு விளக்கு ஏற்றி அச்சு வெல்லம் , பால் சர்க்கரை பொங்கல் ,பழங்கள் நைவேத்தியமாக வைத்து தீப தூப ஆராதனை செய்வது நன்மை பயக்கும்.
'ஓம் விக்ன விநாயகா போற்றி ஓம் 'என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம். விநாயகர் அகவல் படிக்கலாம் தோப்புக்கரணம் போட்டு வழிபட விநாயகர் அருள் பரிபூரணமாக கிட்டும். வீட்டில் தீபம் ஏற்றி குறைந்தது அரை மணி நேரம் எரிய வைத்து ஒரு மலர் வைத்து குளிர வைக்கவும்.
பிரசாதமாக வைத்த பொருட்களை வீட்டில் உள்ளவர்களுக்கும் அருகில் உள்ள அண்டை வீட்டாருக்கும் பகிர்ந்து கொடுக்கவும். இவ்வாறு வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர் வழிபாடு செய்ய அனைவரது தொழில் முன்னேற்றம் கல்வி வாழ்க்கை தரம் உயரும்.
மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நலம் காக்கும் ஸ்டாலின்.. உங்கள் குடும்பத்தின் நலன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
கவினும் நானும் உண்மையாக காதலித்தோம்... எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பில்லை... சுபாஷினி விளக்கம்!
கிராமங்களில் உள்ள சிறு குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை: தமிழக அரசு!
அரசு ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிலைப்படுத்த வேண்டும் - சீமான்!
பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
மோடியா இந்த லேடியா என்று கேட்டு அதிர விட்டவர் ஜெயலலிதா.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஓபிஎஸ்!
மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை
பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!
மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!
{{comments.comment}}