ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தி நோட்புக் கொண்டாட்டம் செய்த லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி அடுத்த போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. 61வது லீக் போட்டியான இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 115 ரன்களை குவித்தனர்.

பின்னர், மார்ஷ் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்களில் வெளியேறினார். மார்க்ரம் 61 ரன்களும், பூரன் 45 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸ் செய்த சன்ரைஸ் அணி ஹைதராபாத் அணியின் சார்பாக ஓப்பனிங்கில் களமிறங்கிய
அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, இஷான் கிஷன் 35 ரன்களும், கிளாசன் 47 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
இறுதியாக ஹைதராபாத் அணி, 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் லக்னா அணி புள்ளி பட்டியலில் 12 போட்டிகளுக்கு 10 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆப் சுற்றை தவறைவிட்டது. லக்னோ அணி தொடரில் இருந்தும் வெளியேறியது.
இதற்கிடையே லக்னோ பந்து வீச்சாளர் திக்னேஷ் ரதி சன்ரைஸ் அணி வீரர் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு, நோட்புக் கொண்டாட்டம் செய்துள்ளார். அதாவது அவரை அவுட் செய்தவுடன் கையில் எழுதுவது போல் சிக்னல் கொடுத்துள்ளார். அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து திக்னேஷ் ரதி அடுத்த போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மேலும் போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமும் விதித்தது. 50 சதவீத அபராதத்தில் 25 சதவீதம் அபிஷேக் ஷர்மாவுக்கு வழங்க வேண்டும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
விஷால் தொடர்ந்த அப்பீல் மனு.. விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுப்பு.. வேறு பெஞ்சுக்கு பரிந்துரை
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}