- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: லஞ்ச்சுக்கு சூப்பரான சைட் டிஷ் துவரம் பருப்பு தேங்காய் துவையல் நேத்து பாத்தோமா.. இன்னிக்கு இன்னொரு துவையல்.. அதுதான் கொள்ளு துவையல்.
கொள்ளு ரசம் சாப்பிட்டிருப்பீங்க.. அதே மாதிரிதான் இந்த கொள்ளு துவையலும் சூப்பர் டேஸ்ட்டா இருக்கும். பார்க்கலாமா.
கொள்ளு துவையலுக்குத் தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - 10 இலை
மல்லித்தழை - 10
சிறிய வெங்காயம் - 6
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய் - பாதி
உப்பு, புளி, காரம் தேவைக்கும், விருப்பத்திற்கு ஏற்ப
செய்முறை :
கொள்ளை கழுவி குக்கரில் தண்ணீர் 2 கப் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும். 4 விசில் விடவும்.
பிரஷர் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த வடிகட்டிய தண்ணீரை பயன்படுத்தி கொள்ளு ரசம் வைக்கலாம்.
மீதி தண்ணீருடன் உள்ள கொள்ளுடன் குக்கரில் வெங்காயம், சீரகம், வரமிளகாய், பூண்டு, பெருங்காயம், சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.
குக்கரில் ஒரு விசில் விட்டு ஆறிய பிறகு மிக்ஸியில் கறிவேப்பிலை, நெல்லிக்காய், மல்லித்தழை ஆகியவற்றுடன் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளித்து, துவையலுடன் சேர்த்தால் சுவையான கொள்ளு துவையல் ரெடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}