மதகஜராஜா.. காமெடியை மட்டும் வழிச்சு எடுத்துட்டா.. ஒன்னுமே இல்லை.. சுந்தர். சி ஜெயிச்ச கதை!

Jan 13, 2025,04:14 PM IST

- இந்துமதி


சென்னை: மதகஜராஜா.. திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பேச்சுதான். கேம்சேஞ்சரைக் கூட பின்னுக்குத் தள்ளி விட்டது இந்தப் படம். இத்தனைக்கும் படம் எடுத்தே 12 வருஷமாச்சு.. ஆனாலும் படு லேட்டாக வந்தாலும் கூட படு வேகமாக ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டது இந்த படம். காரணம்.. சுத்தமா அக்மார்க் சுந்தர். சி. டைப் காமெடி.


தமிழ் சினிமாவில் இரண்டு பார்முலாவுக்கு எப்பவுமே வெற்றி கியாரண்டி. ஒன்று சென்டிமென்ட்.. இன்னொன்று காமெடி. இந்த இரண்டையும் கரெக்டான மீட்டரில் வைத்துக் கொடுத்தால் அந்தப் படம் சக்ஸஸ்தான். சுந்தர். சி இதில் 2வது டைப். பேமிலி டைப் கதையை காமெடியில் முக்கி டோஸ்ட் செய்து கொடுப்பதில் அவர் கில்லாடி. அப்படித்தான் இந்த மதகஜராஜா படத்தையும் அவர் எடுத்துள்ளார். இதனால் இவ்வளவு லேட்டாக வந்தாலும் கூட படம் தப்பிப் பிழைத்திருக்கிறது.




ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மதகத ராஜா. விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அஞ்சலி, வரலட்சுமி என இரு கதாநாயகிகள். படம் 12 வருடங்கள் கழித்து வெளியாகியிருக்கிறது பல சர்ச்சைகளுக்கு பிறகு.


சுந்தர் சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதுதான் இப்படத்திலும் இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் சந்தானம் காமெடி. இரண்டாவது பாதியை மனோபாலா காமெடி நகர்த்தி செல்கிறது. கதை என்று படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை. வழக்கமான நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கும் நண்பன் கதாபாத்திரம். இதிலும் நண்பர்களுக்காக விஷால் வில்லனோடு போராடி ஜெயிக்கிறார். இதுதான் கதை.


படம் முழுக்க விரவி ஓடியிருக்கிறது காமெடி. அதுதான் படத்தின் உயிர் நாடியும் கூட. அந்தக் காமெடியை மட்டும் தனியாக வடித்து எடுத்து விட்டுப் பார்த்தால் படம் அரை மணி நேரம் கூட மிஞ்சாது. அந்த அளவுக்கு காமடியை அழகான முறையில் படத்தின் பிற காட்சிகளோடு மிக்ஸ் செய்துள்ளார் சுந்தர் .சி.




சந்தானம்தான் படத்தின் உயிர் நாடியாக வருகிறார். பழைய வின்டேஜ் சந்தானம். இப்படிப்பட்ட சந்தானத்தை அந்த சந்தானமே திரும்பி வந்தாலும் கூட ரசிகர்களுக்கு காட்ட முடியாது . நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்தின் பஞ்ச் வசனங்களை ரசிக்க முடிகிறது. ரசிகர்களுக்கு அதில் செம திருப்திதான்.


இதில் நடித்த மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு, நெல்லை சிவா ஆகியோர் இன்று உயிரோடு இல்லை, மணிவண்ணன் சில நிமிடங்களே வருகிறார்... மனோபாலாவை வில்லனில் ஒருவராக காண்பிக்க முயற்சித்து காமெடியாக மாற்றி இருக்கிறார்கள். அது கரெக்டாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.


சோனு சூட் வில்லனாக வருகிறார். அவருக்கும், விஷாலுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. பழைய விஷாலைப் பார்க்கும்போது இன்றைய விஷாலே மிகவும் ஏக்கமாகப் பார்ப்பார். அப்படி ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக இப்படத்தில் ஜொலித்திருக்கிறார் விஷால்.




படம் பழைய ஃபார்முலாவாக இருந்தாலும் மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் கேட்கும் படியாக இல்லை .ஆனால் விஷால் பாடி இருக்கும் பாடலுக்கு மக்களிடம் வரவேற்பிருக்கிறது. கடைசியாக படம் முடிந்த பிறகு சதாவோடு ஒரு டூயட் வைத்திருக்கிறார்கள். அதுதான் ஏன்னு தெரியவில்லை.


நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், ஆர்யா ஆகியோர் விஷாலுக்கு நண்பர்களாக  வந்து போகிறார்கள். குடும்பத்தோடு போகலாம்.. குதூகலமாக ரசிக்கலாம்.. குபீர் குபீரென சிரிக்கலாம்.. முகம் சுளிக்க வைக்கும் ஒரு சீன் கூட இல்லை.. ஜில்லுன்னு இருக்கு படம்.. பழைய படமாக இருந்தாலும் செம ஃபிரஷ்.. இதுதான் படம் பார்த்து விட்டு வரும் ரசிகர்களின் தீர்ப்பு. 


நிஜத்திலும் படம் அப்படித்தான் இருக்கிறது.. மதகஜராஜா.. சபாஷ் ராஜா!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

news

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!

news

கொல்வோம்னு மிரட்டுகிறார்கள்.. டெல்லி காவல் நிலையத்தில்.. கௌதம் கம்பீர் புகார்!

news

திருமண நாளான இன்று மனைவி ஷோபாவுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த.. எஸ்.ஏ சந்திரசேகர்..!

news

ஒரு நிஜம் .. ஒரு கற்பனை..!! (சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்