சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் கடற்கரையில், போலீஸாரிடம் நள்ளிரவில் அத்துமீறிய விவகாரத்தில் கைதான சந்திர மோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் லூப் சாலையில் நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்திரமோகன் என்பவர் தனது சொகுசு காரை போக்குவரத்திற்கு இடஞ்சலாக நிறுத்தியுள்ளார். காரை எடுக்குமாறு ரோந்து போலீசார் கூறிய போது, சந்திரமோகனும் அவரது தோழியும் ஆபாச வார்த்தைகளிலும் போலீஸாரை திட்டியுள்ளனர். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கூப்பிடவா என்றும் அந்த ஆண் சவால் விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பலரும் கொதிப்படைந்தனர். இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் மீது, ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மற்றும் அவரது தோழி சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரின் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சந்திரமோகன் மட்டும் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளது.
வெளியில் வந்த இருவரிடமும் எந்த யூடியூப் சானல் பேட்டி எடுத்து அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மாமல்லபுரம் கடற்கரையில் தசாவதாரம்.. இன்று மாலை.. மறக்காமல் பாருங்கள்!
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
{{comments.comment}}