சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் என சென்னை பல்கைலக்கழகம் அறிவித்துள்ளது.
மிச்சாங் புயல் ஏற்படுத்திய கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மிகவும் சிரமம்பட்டு வந்தனர். அரசு போர்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுத்து அங்குள்ள மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறது. இந்நிலையில், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை இங்குள்ள பொது மக்களுக்கு செய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புயல் வந்த நாள் முதல் இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ள நீர் பதித்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரையாண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல், சென்னை பல்கைலக்கழகம் ஒத்தி வைத்திருந்தது. டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்பொழுது, டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}