மதுரை : மதுரையில் அதிமுக சார்பில் நடத்தப்பட உள்ள மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 ம் தேதி தமிழக அரசியலில் முக்கியமான நாளாக மாறி உள்ளது. அன்று ஈபிஎஸ் தலைமையில் மதுரையில் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 15,000 க்கும் அதிகமானவர்களுக்கு தடபுடல் விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே ஆகஸ்ட் 20 ம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார் ஓபிஎஸ். இதனால் கட்சி தொண்டர்களின் ஆதரவு யாருக்கு அதிகம் என்பது அன்று தெரிந்து விடும்.
அதிமுக மட்டுமின்றி திமுக.,வும் ஆகஸ்ட் 20 ம் தேதி நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு, தமிழக கவர்னர் ரவி ஆகியோரை கண்டித்து திமுக இளைஞர், மாணவர், மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு விமான நிலையத்தில் போதிய அனுமதி பெறவில்லை. அதனால் அந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆகஸ்ட் 20 ல் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி கேட்டும் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.
மாநாட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்று மதுரை கோர்ட் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்பதை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிமுக மாநாட்டிற்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனுவை விசாரித்த மதுரை கோர்ட், நான்கு மாதங்களுக்கு முன்பே மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளனர். கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு முடியும்? என மனுதாரரத கேள்வி எழுப்பிய ஐகோர்ட், மாநாட்டில் வெடி பொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக தரப்பு அளித்த உறுதியை ஏற்று மாநாடு நடத்த அனுமதி வழங்கி உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}