சென்னை: ஊழல் குறித்து புகார் அளித்த மக்களுக்கு இன்று நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசியல் வரலாற்றில் எந்த மாநகராட்சியிலும் இல்லாத அளவிற்கு, மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக பல நாட்களாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் சுரேஷ்குமார் இந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊழல் குறித்து புகார் அளித்த மக்களுக்கு இன்று நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாநகராட்சி வரியை உயர்த்தி, அதன் மூலம் மக்களுக்கு சேவை வழங்குவதாகக் கூறி, அந்தப் பணத்தில் ஊழல் செய்யும் இத்தகைய ஊழல்வாதிகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.
இதன் மூலமே தமிழ்நாட்டில் லஞ்சமும் ஊழலும் இல்லாத, கேப்டன் விஜயகாந்த் லட்சியத்தின் படி நேர்மையான ஆட்சி அமைய முடியும். இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு, மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதி என்ற போர்வையில் ஒட்டுமொத்த நீதிமன்றங்களையும், ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் இத்தகைய தொடர் செயல்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இதுபோன்ற நாடகங்களை விடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீதிமன்றம் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், ஊழல் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்டு, மதுரை மாநகராட்சிக்கு மீண்டும் செலுத்தி, மதுரை மாநகராட்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த அரசு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்
8 போர்களை நிறுத்திய நான் தான் நோபல் பரிசுக்குத் தகுதியானவன்.. மீண்டும் டிரம்ப் பொறுமல்
சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 16, 2025... இன்று நன்மைகளை அதிகம் பெறும் ராசிகள்
North East Monsoon season 2025.. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள வச்சு செய்யும் மழை!
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
{{comments.comment}}