- தேவி
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு.. ஒரு பாரம்பரியம் உண்டு.. கதை உண்டு, கலாச்சாரமும் உண்டு. இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் நிறைந்த பூமிதான் நம்ம தமிழ்நாடு.. அதிலும் குல தெய்வ வழிபாடு இங்கு மிக மிக விமரிசையானது.. அப்படிப்பட்ட ஒரு குல தெய்வம் குறித்துதான் இங்கு பார்க்கப் போகிறோம்.. இது ஒரு அம்மன்.. குலம் காக்கும் காளியம்மன்.. குடும்ப நலம் காக்கும் உக்கிர காளியம்மன்.. அந்த அம்மன் இங்கு எழுந்துருளிய வரலாற்றை படித்தாலே மேனி சிலிர்க்கும்.. உள்ளம் உருகும். வாங்க பார்ப்போம்.
மதுரை சமயநல்லூரில் வடகரை ரோட்டில் அமைந்துள்ள உச்சி மாகாளியம்மன் கோவில் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். இக்கோவிலானது 1970களில் உருவானது. இக்கோவிலானது மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாகவும் முழு மனதுடன் நம்பி வரம் கேட்பவர்களுக்கு கேட்ட வரத்தை கொடுக்கும் கோவிலாகவும் இக்கோவிலின் மூல தெய்வமான, காளியம்மன் காட்சியளிக்கின்றார்.
எப்படி இந்த இடத்தில் கோவில் உண்டானது என்பதற்கான சில வரலாற்றுத் தகவல்களும் உள்ளன. இதுகுறித்து கோவிலின் பக்தையான ஜனகம் நம்மிடம் இதுகுறித்துக் கூறும்போது, அம்மனின் உருவங்கள் வடமாநிலங்களில் இருந்து பெட்டியின் மூலமாக நீரோடையில் வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக உண்மையான புராணக்கதையும் உண்டு. பெட்டிக்குள் காளியம்மனின் உருவங்களும் ஓலைச்சுவடிகளும் இருதாகவும் சொல்லப்படுகின்றது. அதை எடுத்து ஆற்றங்கரையில் வைத்து விட்டு மூன்று பேர் சென்றதாகவும், அப்படி வைத்த மூன்று பேர்களில் ஒருவர்தான் நடராஜன் ஐயா அவர்கள்.அன்று இரவே அவர்களது வீட்டு கதவை காளியம்மன் தட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.

அக்காலங்களில் குறி கேட்கும் பழக்கம் மிகவும் முதன்மையாக இருந்தது வந்தது. அப்படி குறி கேட்டதில் அம்மனின் அருள் வாக்கில் சமயநல்லூர் வடகரை ரோட்டில் தனக்கென்று ஒரு கோயில் அமைத்து வழிபட்டு வருமாறு கிடைத்தது. என்னை நம்பி வருபவர்களுக்கு எக்குறையும் இன்றி நான் காப்பேன் என்றும் மாகாளியம்மன் கூறியதாகவும் சொல்லப்படுகின்றது. அன்றிலிருந்து ஐயா நடராஜ் அவர்கள் கோவிலின் திருப்பணியை நடத்தி வந்தார்கள். ஐயா நடராஜன் அவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்வது, சோழி போட்டு பார்த்து சொல்வது போன்ற நல்ல காரியங்களை செய்து கொண்டு வந்தார்கள்.
பொதுவாக ஆன்மீகத்தில் அதிக பற்று இருப்பவர்களுக்கு தனது மரணம் பற்றியும் தெரியும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அப்படி ஐயா நடராஜன் அவர்கள் தனது மரணத்தை பற்றி நன்கு அறிந்திருந்தார். இந்த தினத்தில் நான் இறந்து போவேன். எனது உடலை கோவிலுக்கு அருகில் ஜீவசமாதியாக வைத்து வழிபடவும் என்றும் சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன தினத்தன்றே இயற்கை எய்ததாகவும் அவர் சொன்னவாறு அவரது உடலை கோவிலுக்கு அருகில் ஜீவ சமாதியாக வைத்து வழிபாடு செய்து வருகின்றார்கள் என்று கூறினார் ஜனகம்.
நடராஜன் இறந்த தினத்தை ஒவ்வொரு வருடமும் குருபூஜையாக பூஜை செய்து வருகிறார்கள் அவரது அடுத்த வம்சத்தினர். பக்தர்கள் மதுரைக்குச் சென்று நமக்கு வேண்டும் வரத்தை கேட்டு பெற இக்கோவிலுக்கு சென்று அம்மனின் அருள்வாக்கு பெறலாம். இந்தக் கோவிலுக்கு என்று உள்ள பெரும் திரளான பக்தர்கள் இந்தக் கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருவதற்குத் தவறுவதில்லை.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}