சென்னை : இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது. இந்த சூரிய கிரகணமானது இந்தியாவில் இரவு நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் இதனை காண முடியாது. இதன் காரணமாக இந்தியாவில் சூரிய கிரகணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
அதே சமயம், ஜோதிட ரீதியாக மகாளய அமாவாசையில் வரும் கிரகணம், கிரகங்களின் சேர்க்கை ஆகியவை சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், இதற்காக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. சூரிய கிரகண நாளில் வரும் மகாளய அமாவாசை எந்த ராசிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் வருவதால் சூரியன், சந்திரன், புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த நான்கு கிரகங்களும் கன்னி ராசியில் காலையில் உத்திரம் நட்சத்திரத்திலும், பிறகு அஸ்தம் நட்சத்திரத்தில் இணைய உள்ளன. சந்திரன், கன்னி ராசியில் நுழைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியான சில பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால் கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பாதிப்புக்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் சிதறு காய் விடுவது சிறப்பு. அல்லது மட்டை தேங்காய் வாங்கி, அதோடு பச்சரிசியை வைத்து இல்லாதவர்கள், கோவிலில் இருக்கும் அர்ச்சகர் என யாருக்காவது தானம் கொடுத்து விடுவது சிறப்பு. பச்சரிசி என்ற சந்திரனின் அம்சம் என்பதால் இது சந்திரனால் ஏற்படும் பாதிப்புக்களை நீக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நாவல் மரத்தின் வேரும் எறும்பு கூட்டமும்
Monday Motivation: மாயமான பண்புகள்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
மயங்காத தமிழ்!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
{{comments.comment}}