சென்னை: வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா. திருவான்மியூரில் உள்ள இவர்களது வீட்டில் ஒரு பெண் வேலைக்காக சேர்ந்துள்ளார். ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகிய இருவரும் அந்த பெண்ணை வெளியில் விடாமல், தொடர்ந்து வேலை வாங்கி வந்ததாகவும், அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன.
இந்நிலையில், ஆண்டோ மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் தன்னை நிர்வாணப்படுத்தி, உடலில் சூடுபோட்டு, கரண்டியால் மார்பில் அடித்ததாக அவர் கூறியிருந்தார். விசாரணைக்குப் பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனைக்கு பின்னர் எம்எல்ஏவின் மகன் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் கடந்த 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க மூன்று தனி படை அமைக்கப்பட்டது.
தனிப்படை பிரிவினர் விசாரித்ததில் இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் காவல் நிலையத்திற்கு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}