புதுடில்லி: ஒரே ஆண்டில் 200 முறை விமானத்தில் பயணித்து திருட்டில் ஈடுபட்ட டெல்லி நபர் கைதாகியுள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளில் 2வது முறையாக கைதாகியுள்ளார்
டெல்லியை சேர்ந்தவர் ரஜேஷ் கபூர். 40 வயதாகும் இவர் ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட விமானத்தில் பயணித்து, சக பயணிகளின் உடைமைகளை திருடி வந்துள்ளார். இந்நிலையில், டெல்லி விமானத்தில் பயணித்த 2 பயணிகள், ரூ.27 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனதாக புகார் அளித்தார்கள். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் 2 விமானத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ராஜேஷ் கபூர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தொடர்ந்து 20 வருடங்களாக இந்த திருட்டை செய்து வந்துள்ளார் இவர். திருடிய பொருட்களை வைத்து சொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்தி வருகிறாராம். கடந்த 2019ம் ஆம்டு இவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார். மறுபடியும் இதே திருட்டில் இறங்கி விட்டார்.
ராஜேஷ் கபூர் மற்றும் அவரது நண்பர் செராக்ஸ் ஜெயின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். திருட்டுத்தனத்திற்காக ஒரே நாளில் 2, 3 முறை கூட விமானத்தில் பயணம் செய்துள்ளாராம் ராஜேஷ் கபூர். இது குறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் உஷா ரங்னானி கூறுகையில், மூன்று மாத காலமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை இழந்தது தொடர்பாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தோம். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 11 தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்தார். இதுபோன்ற பிப்ரவரி 2 தேதி அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்துள்ளார்.
இதனை அடுத்து டெல்லி மற்றும் அமிர்தசரசில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சி சி டிவி காட்சிகளிலும் ஒரே நபர் சந்தேகத்திற்கு இடமாக தோன்றினர்.பின்னர் அவரின் தொலைபேசி நம்பரை விமான நிலைய அலுவலகத்தில் பெற்றோம். ஆனால், அவர் ஒரு போலியான நம்பர் அளித்திருந்தார். தொடர்ந்து நாங்கள் நடத்திய விசாரணையில் அவர் ராஜேஷ் கபூர் என்பதும், அவருக்கு வயது 40 என்பதும் கண்டறிந்தோம்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருட்டுச் செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை திருடுவதை அவர் ஒரு வாடிக்கையாக கொண்டுள்ளார். வயதானவர்கள் தான் அவரது டார்கெட் பயணிகள். தங்கள் பைகளை வைக்கும் கேபினில் உள்ள பொருட்களை யாருக்கும் தெரியாமல் திருடுவது அவரது முதல் பணி. அது நடக்காத பட்சத்தில் குறிப்பிட்ட பயணிகளை டார்கெட் செய்து அவர்களுக்கு அருகில் அமர்ந்த பொருட்களை திருடியுள்ளார் என்றார் அவர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}