கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.. பழிக்குப் பழியாக.. காதலனின் மனைவியை மணந்த கணவன்!

Mar 04, 2023,11:23 AM IST
பாட்னா: பீகாரில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவி, இன்னொரு ஆணுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் ஆத்திரமடைந்த கணவன், அந்த கள்ளக்காதலனின் மனைவியை மணந்து பழி தீர்த்துள்ளார்.



பீகாரின் ககரியா மாவட்டத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.  ககரியாவைச் சேர்ந்தவர் நீரஜ். இவருக்கும் ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நான்கு பிள்ளைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு அதே ஊரைச் சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவியுடன் நீரஜ் கள்ளக்காதலில் ஈடுபட்டார்.




இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் அதிரடியான ஒரு காரியத்தில் இறங்கினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூபி தேவியை திருமணம் செய்து கொண்டார் முகேஷ். இதை அறிந்த நீரஜ் அதிர்ச்சி அடைந்தார். போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மனைவியை முகேஷ் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டியதாகவும், ஆனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பின்பற்றாமல் முகேஷ் தலைமறைவாகி விட்டதாகவும் நீரஜ் கூறியுள்ளார். முகேஷுக்கும் அவரது மனைவிக்கும் 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் என்ன தமாஷ் என்றால் முகேஷின் மனைவி பெயரும் ரூபி தான். 

இந்த விவகாரத்தில் தற்போது இன்னொரு திருப்பமாக, முகேஷின் மனைவியை நீரஜ் கடந்த பிப்ரவரி மாதம் மணந்து கொண்டு மனைவியாக்கி விட்டார்.  இப்படி இந்தத் தம்பதிகள் மாறி மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!

news

சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!

news

மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!

news

நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted

news

வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்

news

அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்

news

ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!

news

பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!

அதிகம் பார்க்கும் செய்திகள்