Chettinad Recipes: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி சமையல்.. காரசாரமான பூண்டு ஊறுகாய்!

Jul 04, 2026,01:03 PM IST
- மணிமா

மணக்க மணக்க வெள்ளைப் பூண்டு ஊறுகாய் சாப்பிட்டிருக்கீங்களா.. கேட்டதுமே நாக்கில் சுவை ஊற ஆரம்பிச்சிருச்சு பாருங்களேன்..

செட்டிநாட்டின் அனைத்து ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் உள்ளங்களுக்கு அன்புடன் வணக்கம் சொல்வது என்றென்றும் உங்கள்  ........மணிமா ......

இன்று காரசாரமான ருசிகரமான பூண்டு ஊறுகாய் செய்வோமா, குறைவான பொருட்கள் தேவை. அதிகமான அன்பையும் சேர்த்து சந்தோஷமாய் சமைத்தால் சுவையும் மணமும் நிறைந்த செட்டிநாட்டு ஊறுகாய் தயார்

இங்கு நாட்டுப் பூண்டு அல்லது மலைப்பூண்டு எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பூண்டு பல் பெரிதாக இருந்தால் மூன்று துண்டாக அரிந்து கொள்ளவும். நான் இங்கு முழுசாக எடுத்துக் கொள்கிறேன்.



தேவையான பொருட்கள்

பூண்டு உரித்தது ஒரு கப்
நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி அளவு
எலுமிச்சம் பழச்சாறு முக்கால் கப்
தனி மிளகாய் தூள் நான்கு ஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவு
தேவையான அளவு உப்பு
வெல்லம் துருவி இரண்டு ஸ்பூன் அளவு

வறுத்து பொடிக்க.

மல்லி என்னும் தனியா கால் ஸ்பூன்
சீரகம் கால் ஸ்பூன்
வெந்தயம் கால் ஸ்பூனில் பாதி

இவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் கருகி விடாமல் குறைந்த தீயில் லேசான சூடு வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
 
அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு போட்டு பொரிந்ததும் உரித்து வைத்துள்ள பூண்டுகளை அதில் சேர்த்து ஐந்து நிமிட நேரம் வேக விடவும். பிறகு உப்பு தனி மிளகாய் தூள் பெருங்காயத்தூள் சேர்க்கவும். வறுத்து அரைத்த பொடியையும் உடன் சேர்க்கவும். மிதமான தீயில் ஒரு ஐந்து நிமிடம் பிரட்டி விட்டு வெள்ளைப்பூடு வெந்து விட்டதா என்று பார்க்கவும் நன்கு வெந்து விட்டது எனில் எலுமிச்சை சாறை உள்ளே விடவும். 

இன்னும் சிறிது வேக வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்க்கலாம். பிறகு எலுமிச்சை சாறு சேர்க்கவும் (எலுமிச்சம் பழம் பிழியும் பொழுது தோலோடு சேர்த்து அழுத்திப் பிழிந்தால் ஊறுகாய் கசக்கும். லேசாகப் பிழிந்து சாறு எடுக்கவும்).



வாணலி ஓரத்தில் எண்ணெய் கசிந்து வரும் பொழுது துருவிய வெல்லத்தை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அடுப்பை அணைத்து இறக்கி ஆற விடவும்.

நன்கு ஆறியபின் ஒரு ஈரம் இல்லாத பாட்டிலில் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். நான் எந்த பிரசர்வேட்டிவ் சேர்க்கவில்லை. அதனால் வெளியில் இருந்தால் கெட்டுப் போய்விடும். சாப்பிடப் போகும் போது தேவையானவற்றை ஒரு சிறிய கப்பில் எடுத்துக் கொள்ளவும். ஈரமான ஸ்பூன் உபயோகிக்க கூடாது. ஒரு மாதம் இரண்டு மாத காலமானாலும் ஊறுகாய் கெட்டுப் போகாது.

பூண்டு இரண்டு கப் அல்லது நான்கு கப் உரித்து எடுத்துக் கொண்டால் மற்ற பொருட்களையும் அதற்கு தகுந்தாற்போல் பெருக்கிக் கொள்ளவும். மிக மிக எளிதான முறையில் மணக்க மணக்க காரசாரமான பூண்டு ஊறுகாய் ரெடி.

ருசிக்க ருசிக்க தயிர் சாதம் உள்ளே போகும்.

அடுத்த ஒரு சுவையான செட்டிநாட்டு ரெசிபியுடன் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்கின்றேன்
அன்புடன் உங்கள் ....மணிமா ....


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

Chettinad Recipes: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி சமையல்.. காரசாரமான பூண்டு ஊறுகாய்!

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

news

Nainar Nagendran: ஆளுநர் அர்லேகரை திடீரென சந்தித்த பாஜக நிர்வாகிகள்.. இது தான் விஷயமா?

news

CV Shanmugam: தவெக-வில் இணைகிறாரா சி.வி.சண்முகம்? ஆலோசனையில் பங்கேற்ற அந்த விஐபி!

news

Tamil Poem: இந்தத் துறவியின் வேஷம் கலைத்தேன்!

news

Tamil Poem: ஒரு இதயத்தின் காதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்