7 விக்கெட் எடுத்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் வரலாற்றுப் பழிகள் உண்டு.. மனுஷ்யபுத்திரன் நச் கவிதை!

Nov 16, 2023,02:38 PM IST
சென்னை: முகம்மது ஷமியை வைத்து ஒரு அட்டகாசமான கவிதையைத் தீட்டியுள்ளார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் ஆரம்ப கட்டப் போட்டிகளில் முகம்மது ஷமிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஹர்டிக் பாண்ட்யா காயமடைந்து விளையாட முடியாமல் போனதால்தான் ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டு புயலாக மாறி இந்திய அணிக்கு லட்டு போல வெற்றிகளைத் தேடிக் கொடுத்து வருகிறார்.

நேற்றைய போட்டியில் விஸ்வரூபம் எடுத்த அவர் 7 விக்கெட்களை வீழ்த்தி அசகாய சாதனை படைத்தார். இந்த நிலையில் முகம்மது ஷமியை வைத்து ஒரு கவிதை தீட்டியுள்ளார் மனுஷ்ய புத்திரன்.



அவரது கவிதை இதோ:

முகமது ஷமி 
அரை இறுதியில்
ஏழு விக்கெட்டுகள் எடுக்கிறான்
ஒரு கேட்சை தவறவிட்டதற்காக
அவன் ஏழு விக்கெட்டுகள்
எடுத்தாக வேண்டும்
தன்னை நிரூபித்தாகவேண்டும்
இல்லாவிட்டால் தண்டனைகள் உண்டு
வரலாற்றுப் பழிகள் உண்டு
வெளியேறுவதற்கான
திறந்த வாயில்கள் உண்டு

வேறு சிலருக்கு அப்படியில்லை
தவறுகளின் சலுகைகள் 
அவர்களுக்கு உண்டு
திறமையின்மைகளின் கருணை
அவர்களுக்கு உண்டு

தினம் தினம் 
தன்னை நிரூபிக்க வேண்டியிருப்பவர்கள்
அனைவருமே களைப்பாக உணர்கிறார்கள்

தினமும் தங்கள் 
அன்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
காதலை நிரூபிக்க வேண்டியவர்கள்
பொறுப்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
விசுவாசத்தை நிரூபிக்கவேண்டியவர்கள்
ஆரோக்கியத்தை நிரூபிக்க வேண்டியவர்கள்
தகுதியை நிரூபிக்க வேண்டியவர்கள்
தேசபக்தியை நிரூபிக்கவேண்டியவர்கள்
கற்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
திறமையை நிரூபிக்க வேண்டியவர்கள்
எல்லோருமே களைப்பாக உணர்கிறார்கள்

அவர்கள்  தினம் தினம் 
தேர்வுகள் எழுதவேண்டும்
தினம் தினம்
நூறு மதிப்பெண்கள் பெறவேண்டும்
99 மதிப்பெண்கள் கூட
அதிருப்தியுடன்தான் ஏற்கப்படுகின்றன

தினம் தினம் 
தன்னை நிரூபிக்கவேண்டிய ஒருவர்
தன்னால்தான் இந்த மழையில்
முழுமையாக நனைய முடியும் என நிரூபிக்க
மழையோடு மழையாக நடந்து செல்கிறார்

நேற்று இரண்டு முறை
நிரூபித்துவிட்டு
இன்று எதையும் நிரூபிக்காமல் 
இருக்கட்டுமா என்று கேட்டால்
அதைக் கணக்கில் 
வரவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்

நான் என் பிரியத்தை 
தினம் தினம் நிரூபிக்க
இன்று வேறொரு பரிசுகள் விற்கும்
கடைமுன் நின்றுகொண்டிருக்கிறேன்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்