"எதிர்பார்ப்புடன்" பல கட்சித் தலைவர்கள் பாஜகவுக்கு வருகிறார்கள்.. அண்ணாமலை தகவல்

Feb 16, 2024,06:11 PM IST

சென்னை: பாஜகவுக்கு பலரும் வருகிறார்கள். சிலர் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருகிறார்கள். பலர் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வருகிறார்கள், அதை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


லோக்சபா தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று பிசியாக உள்ளன. அதேசமயம், தமிழ்நாட்டில் அண்ணாமலையும், தேசிய அளவில் ராகுல் காந்தியும் தொடர்ந்து தங்களது யாத்திரையில் கவனமாக உள்ளனர்.


இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் சில முக்கியத் தகவல்களை தெரிவித்துள்ளார். அவரது பேட்டி:


கூட்டணி எப்போது இறுதி வடிவம் பெறும்?




பாஜகவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணிக்கு இன்னும் நேரம் இருக்கு. ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கொள்கை இருக்கு, சிந்தனை இருக்கு. அதை ஒவ்வொரு கட்சியும் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எப்படி கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று பார்க்க வேண்டும். 


பாஜகவைப் பொறுத்தவரை நாங்கள் முதலில் இருந்தே தெளிவாக இருக்கிறோம்.  பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும்,  நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நம்புபவர்கள் எங்களுடன் வரலாம். பாஜகவிடம் கூட்டணி பேரம் எல்லாம் கிடையாது.  இன்று வரை கூட்டணி குறித்து அறிவிக்க நேரம் வரவில்லை. கூட்டணியில் யாரெல்லாம் இருக்காங்க, கூட்டணி எப்படி இருக்கும் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.


கூட்டணியை அறிவிக்கும்போதே சீட்டையும் அறிவிக்க வேண்டும். யார் எங்கே நிற்பார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். எல்லாக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உள்ளனர். ஆனால் நாங்கள் மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கிறோம்.. மக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். கட்சியை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிப்போம்.


ஏசிஎஸ், நைனார் நாகேந்திரன் விருப்பம் தவறில்லை


வேலூரில் ஏசி சண்முகம் போட்டியிடப் போவதாகவும், திருநெல்வேலியில் நைனார் நாகேந்திரன் போட்டியிட விரும்புவதாகவும் கூறியது தவறில்லையே. அவர்கள் மூத்த தலைவர்கள். நைனார் நாகேந்திரன் 2 மாதத்திற்கு முன்பே வெற்றி வாய்ப்பு குறித்து வெளிப்படையாகவே பேசி விட்டார். 


அதேபோல 10, 15 தலைவர்கள் வெளிப்படையாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சாதக பாதகங்கள் குறித்துப் பேசியுள்ளனர்.  வேலூரில் ஏசி சண்முகம் 2019ல் அதிமுக சிம்பலில் நின்றார், இப்போது பாஜக சிம்பலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார், தவறில்லை.


விஜயதாரணி பாஜகவுக்கு வருகிறாரா?


யார் பாஜகவில் இணையப் போகிறார், எப்போது இணையப் போகிறார், எங்கே இணையப் போகிறார்கள் என்பதை நான் சொன்னால் தவறாகி விடும். பலரும் பாஜகவுக்கு வருகிறார்கள். சிலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகிறார்கள். பலர் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வருகிறாரக்ள். அதைப் பூர்த்தி செய்ய வேண்டும், செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். யூகத்தின் அடிப்படையில் நான் எதுவும் சொல்ல முடியாது.


பிரதமர் நரேந்திர மோடி எனது யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பது உறுதி. அத்தோடு வேறு சில அரசு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யவுள்ளதாக தகவல்கள் உள்ளன. ஓரிரு நாட்களில் பிரதமரின் பயணத் திட்டம் குறித்து தெளிவாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

news

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

news

துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்