மார்கழி 02 - திருவெம்பாவை பாசுரம் 02 - பாசம் பரஞ்சோதிக் கென்பாய்

Dec 18, 2023,08:25 AM IST

திருவெம்பாவை பாசுரம் 02 :


பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்

கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்




பொருள் :


நாம் இரவு பகலாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், நான் ஜோதி மயமான சிவ பெருமான் மீது அளவில்லாத பாசம் வைத்துள்ளேன் என்று வீரமாக பேசுவார். இப்போது நீராடி விட்டு, அவரை வழிபட அழைத்தால் வராமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்கிறார்கள் தோழியர். அதற்கு வீட்டிற்குள் இருந்து பதிலளிக்கும் தோழி, ச்சீ...இது என்ன கேலி பேச்சு. கண் அயர்ந்து விட்டதற்காக இப்படி பேசலாமா? என்கிறாள். அதற்கு தோழியர்கள், தேவர்களும் கூட தேடி வழிபட முடியாத சிவனின் மலர் பாதங்களை காட்டி, நமக்கு அருள் செய்ய அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.


சிவலோகத்தில் இருக்கும் அனைவரின் அன்புரிய இறைவன் தில்லை சிதம்பரத்தில் நடம் புரிபவனான ஈசனை காண்பதற்காக நாம் செய்ய வேண்டும் சீக்கிரம் வா என்கின்றனர்.


விளக்கம் :


தேவர்களும் கூட காண கிடைக்காதவர் சிவ பெருமான். அவர் நமக்கு அருள் செய்வதற்காக எப்போது தயாராக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது புரியாமல் உலக மாயையில், ஆசைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலக ஆசைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள, யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான இறைவனின் அருளையும், முக்தியை அடைவதற்கு இறைவனை சரணாகதி அடைய வேண்டும். அதுவே வாழ்வின் நோக்கம் என்பதை உலக மக்களுக்கு புரிய வைக்கிறார் மாணிக்க வாசகர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்