மார்கழித் திங்கள் அல்லவா.. வாசலில் விரியும் வாழ்வியல் கலை!

Jan 12, 2026,12:02 PM IST

- வி. ரஞ்சனி வீரா


மார்கழி மாதத்தில் பெண்கள் கோலமிடும் காட்சி தனி அழகே. பனியால் நனைந்த அதிகாலை நேரத்தில், அமைதியான சூழலில், அரிசி மாவை கையில் எடுத்துக் கொண்டு வாசலில் கோலம் இழைக்கும் பெண்கள் ஒரு கலையை மட்டுமல்ல, ஒரு மரபையும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு புள்ளியும், ஒவ்வொரு கோடும் அவர்களின் பொறுமை, ஒழுக்கம், உள்ளார்ந்த பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. கோலம் இழைப்பது அவர்களுக்குப் பொழுதுபோக்கு அல்ல; அது மனதை அமைதிப்படுத்தும் ஒரு தியானம் போன்றது.


மார்கழி கோலம் பெண்களின் கைகளால் உயிர் பெறும் ஒரு கலை. அந்தக் கலை வீட்டை அழகுபடுத்துவதோடு, இல்லத்திற்குள் நல்ல எண்ணங்கள், நம்பிக்கை, மங்களம் ஆகியவற்றை வரவேற்கிறது. பறவைகளுக்கும் சிறு உயிர்களுக்கும் உணவாகும் அரிசி மாவு, பெண்களின் கருணையையும் பரிவையும் காட்டுகிறது. இவ்வாறு மார்கழி மாதத்தில் பெண்கள் கோலமிடுவதை ஒரு கலையாகக் கொண்டாடுவது, தமிழர் பண்பாட்டின் அழகையும், பெண்களின் பண்புநலனையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் ஒரு இனிய மரபாக திகழ்கிறது.


இதை விரிவாகப் பார்ப்போமா..!




மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுது ஒரு தெய்வீகமான அனுபவம். பனித்திரை விலகாத அந்த நேரத்தில், வீதி முழுவதும் சாணம் தெளித்து, ஈரமான தரைப்பரப்பில் பெண்கள் கோலமிடும் காட்சி, ஒரு ஓவியர் தனது கேன்வாஸில் உயிரோவியம் தீட்டுவதற்கு ஒப்பானது.


வெறும் வெள்ளைப் புள்ளிகளாகத் தொடங்கி, சிக்கலான இழைக்கோலங்களாக (சிக்குக் கோலம்) உருவெடுக்கும் அந்த நேர்த்தி வியப்பிற்குரியது. மார்கழி மாதத்தின் விசேஷமாக, வண்ணப் பொடிகளைத் தாண்டி, செம்மண் இழைத்து கோலத்தின் ஓரங்களை அழகுபடுத்துவது ஒரு தனிச்சிறப்பு.


பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, இயற்கையின் வண்ணங்களை நிலத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள். எந்தப் புள்ளியில் தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்ற கணித நுணுக்கம், ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு இயல்பாகவே கடத்தப்படுகிறது.


மார்கழி கோலத்தின் மகுடமாகத் திகழ்வது கோலத்தின் நடுவில் வைக்கப்படும் பூசணிப் பூ ஆகும். பசுஞ்சாணத்தின் மேல் அமர்ந்திருக்கும் அந்த மஞ்சள் நிறப் பூசணிப் பூ, அந்த இல்லத்தின் மங்களத்தைக் கட்டியம் கூறுகிறது. இது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அந்த வீட்டில் திருமண வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ஒரு மென்மையான சமூகத் தகவல் தொடர்பு முறையாகவும் முற்காலத்தில் இருந்தது.


மார்கழியில் கோலமிடுவது என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு சிறந்த பயிற்சி. எப்படி தெரியுமா..?5


குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஒரு சிறந்த உடற்பயிற்சி. அதிகாலையில் ஓசோன் படலத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்குப் புத்துயிர் அளிக்கிறது.


ஆயிரக்கணக்கான புள்ளிகளுக்கு இடையே தடையின்றி கோடுகளை இழுக்கத் தேவையான கவனக் குவிப்பு, ஒரு சிறந்த தியானப் பயிற்சியாகும்.


மார்கழி மாதக் கோலம் என்பது தனிமனித அழகுணர்ச்சியைத் தாண்டி, ஒரு சமூகப் பிணைப்பாகவும் விளங்குகிறது. ஒரு வீட்டின் வாசலில் போடப்பட்ட கோலத்தை அக்கம் பக்கத்தினர் பாராட்டுவதும், புதிய கோலங்களை ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதும் பெண்களுக்கிடையேயான நட்பையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது.


மார்கழி மாதக் கோலங்கள் வெறும் மாவுக்கோடுகள் அல்ல; அவை தமிழ்ப் பெண்களின் கலைத்திறன், பொறுமை மற்றும் விருந்தோம்பல் பண்பின் வெளிப்பாடு. கால மாற்றத்திலும் அழியாத இந்த மரபு, ஒவ்வொரு ஆண்டும் நம் மண்ணின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டே இருக்கிறது.


(வி.ரஞ்சனி வீரா, தென் தமிழ் எழுத்தாளர், ஆங்கில பட்டதாரி ஆசிரியர், புதுச்சேரி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

news

புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்

news

திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்

news

'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'

news

தொழில்நுட்பக் கோளாறு...பிஎஸ்எல்வி சி62 செயற்கைகோள் இலக்கை அடையவில்லை... இஸ்ரோ விளக்கம்

news

கமலஹாசனின் பெயர், போட்டோவை வணிகரீதியாகப் பயன்படுத்த தடை

news

இளைஞர்களின் எழுச்சி நாயகன்!

news

தேசிய இளைஞர் தினம் (National Youth Day).. யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

news

மார்கழித் திங்கள் அல்லவா.. வாசலில் விரியும் வாழ்வியல் கலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்