திருப்பாவை பாசுரம் 02 :
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
சையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றறோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
உலகத்தில் உள்ளவர்ளே! நாம் அனைவரும் பாற்கலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் அருளைப் பெற வேண்டும், அவரது திருவடியை சேர வேண்டும் என்றால் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பதை சொல்கிறேன் கேளுங்கள். நெய், பால் போன்ற நாவிற்கு சுவையான உணவுகளை உண்ணாமல், தினமும் குளித்து விட்டு கண்களுக்கு மையிட்டும், தலையில் பூ வைத்தும் நம்மை அலங்கரிப்பதில் கவனம் செலுத்தாமலும், செய்யக் கூடாது என சொல்லப்பட்டுள்ள தீய செயல்களை செய்யாமலும், யாரை பற்றியும் தீய சொற்களை பேசாமலும், நம்மை தேடி வரும் அடியார்கள், துறவிகள், முனிவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போதும் என மனநிறைவு பெறும் வரை உணவு கொடுத்து உபசரிக்கவும் வேண்டும்.
விளக்கம் :
பக்தி, விரதம் என்றாலே அதற்கும் விதிமுறைகள் உண்டு. இறைவனின் அருளை பெற வேண்டும் என்றால் இந்த விரதத்தை எப்படி இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் காலத்தில் எதை எல்லாம் செய்ய வேண்டும். எவற்றை எல்லாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பதை தான் ஆண்டாள் நாச்சியார் இந்த பாடலில் தெளிவுபடுத்தி உள்ளார். வெறும் உணவு சாப்பிடாமல் இருப்பதும், கோவிலுக்கு செல்வதும் மட்டும் விரதம் கிடையாது. விரதம் இருப்பவர்கள் தனக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு இறைவனை மட்டுமே மனம் நினைக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துள்ளார் ஆண்டாள் நாச்சியார்.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்