- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்
மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா? கேக்கவே ஆச்சரியமா இருக்குல்ல.. ஆனால் நீங்க நம்பாட்டியும் அதுதான் நெசம்!
நமது வீட்டில் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு ஓவன் இல்லாமல் எளிய முறையில் ரவா கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ரவா கேக் செய்ய தேவையான பொருட்கள்:

ரவா – 2 கப்
சர்க்கரை – 1 கப்
தயிர் – 1/4 கப்
நெய் – 4 டீஸ்பூன்
பால் – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1/2டீஸ்பூன்
முந்திரி - நமது தேவைக்கேற்ப
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டீஸ்பூன்( இருந்தால் பயன்படுத்தலாம்)
உப்பு – ஒரு சிட்டிகை
நறுக்கிய முந்திரி (ஆப்ஷனல்)
செய்முறை:
தயாரிப்பு:
ரவா மற்றும் சீனியை மிக்ஸியில் கொர கொர என அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் காய்சியப் பால், தயிர், சோடா உப்பு, நெய் போன்றவற்றை ஊற்றி நன்றாக கலக்கி பத்து நிமிடம் ஊற வைத்து விட வேண்டும்.
கேஸ் அடுப்பில் ஒரு கனத்த சட்டியை வெறும் சட்டியாக 5 நிமிடம் வைத்தபிறகு அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் ஒரு தட்டில் நாம் தயாராக வைத்த கலவையை ஊற்றிய பிறகு மிகவும் சிறிதாக நறுக்கிய முந்திரிப் பருப்பை மேலே தூவி வைக்க வேண்டும். சரியாக 30 நிமிடங்கள் மேலே ஒரு தட்டை போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து நாம் அதை திறந்து பார்த்தால் மிகவும் சுவையான மற்றும் சாப்டான ரவா கேக் ரெடியாக இருக்கும்.

வெண்ணிலா எசன்ஸ் ஊற்றாமலே கேக் சுவையாக இருந்தது.
நமது பிறந்தநாள் போன்ற சுப நிகழ்வுகளில் கடைகளில் வாங்காமல் வீட்டிலே செய்து சாப்பிடுவோம்.
(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
{{comments.comment}}