திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறதா? உயர்நிலைக் குழு கூட்டத்தில் பரபரப்பு

Jun 26, 2026,12:22 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுகவின் அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிகிறது.


திமுக கூட்டணியில் அதிருப்தி:

சென்னையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உயர்நிலைக் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக உடனடியாக வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு உரிய அங்கீகாரமும், தகுந்த மரியாதையும் வழங்கப்படவில்லை என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கூட்டணிக்குள் தொடர் புறக்கணிப்பு நிலவுவதால், தன்னாட்சியுடன் செயல்படுவதே கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்ற கருத்து இக்கூட்டத்தில் வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது.


சீர்காழி எம்.எல்.ஏ 'மிஸ்ஸிங்' :




இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, சென்னை உயர்நிலைக் குழு கூட்டத்தில் மற்றொரு முக்கிய திருப்பமும் அரங்கேறியுள்ளது. இக்கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க சீர்காழி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் (MLA) பன்னீர்செல்வத்திற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார். கட்சியின் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் கூட்டத்தை அவர் புறக்கணித்தது மதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, கூட்டத்தில் பங்கேற்காததற்கான முறையான காரணத்தைக் கேட்டு அவரிடம் விளக்கம் (Show cause notice) கோர மதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாளை வைகோவின் அதிரடி அறிவிப்பு?

திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்த இறுதிக்கட்ட விவாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும். இதுகுறித்து நாளை (27.06.2026) பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையும், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிக்கவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறதா? உயர்நிலைக் குழு கூட்டத்தில் பரபரப்பு

news

சமூகத்தை உலுக்கும் போதைப் பொருள் நடமாட்டம்.. ஒருங்கிணைந்து வேரறுப்போம்!

news

"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

news

திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி

news

"இனி கூட்டணி வேண்டாம், தனித்துப் போட்டியிடுவோம்!" – ஆ.ராசா அதிரடி பேச்சு

news

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

அதிகம் பார்க்கும் செய்திகள்