சென்னை: கர்ச்சீப்பால் முகத்தை துடைத்ததை அரசியலாக்கியுள்ளார்கள். ஊடகங்களின் செயல்பாடுகள் வருத்தம் தருகின்றன. இனிமேல் ரெஸ்ட்ரூம் போனால் கூட சொல்லிட்டுத்தான் போகணும் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லிக்குச் சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். சந்தித்து விட்டுத் திரும்பியபோது அவர் முகத்தில் கர்ச்சீப் இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியானது. அவர் முகத்தை மூடிக் கொண்டு போனதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது இந்த செய்தி குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். அவரது பேட்டியிலிருந்து:
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்க்கப் போவதை சொல்லிட்டுத்தான் போனேன். ஆனால் அதில் அரசியல் செய்வார்கள் என்பதால்தான் தமிழ்நாடு இல்லத்திலிருந்து அரசு காரில்தான் போனேன். கிடைத்த காரில் போய் சந்தித்தேன். போய் விட்டுத் திரும்பும்போது முகத்தை கர்ச்சீப்பால் துடைத்தேன். அதை வைத்து அரசியல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புகழ் பெற்ற, இந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற நமது ஊடகங்கள் இப்படித் தரம் தாழ்ந்து செயல்பட்டது வேதனையைத் தருகிறது. வருத்தமாக இருக்கிறது. வெட்கம் இன்றி சொல்வதானால், இனிமேல் ரெஸ்ட் ரூம் போனால் கூட சொல்லிட்டுத்தான் போகணும். அந்த அளவுக்கு ஊடகங்களின் செயல்பாடுகள் வருத்தம் தருகின்றன. இதை வருத்தத்தோடு சொல்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் குறித்து இப்படி அவதூறாக செய்தி வெளியிடுவது தவறு என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். இது சரியல்ல.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டசபையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார் . யார் சட்டையைக் கிழிப்பார்கள். மனநிலை பாதித்தவர்கள்தான் சட்டையைக் கிழிப்பார்கள். அப்படிப்பட்டவர் என்னை விமர்சிக்கிறார்.
நான் இருமினால் விவாதம், தும்மினால் விவாதம் என்று ஊடகங்கள் தினசரி விவாதம் நடத்துகிறீர்கள். கடந்த எட்டரை ஆண்டு காலம் என்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் என்னை அடையாளம் காட்டியிருக்கிறீர்ககள். இதற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
ரகுபதிக்கு என்ன தகுதி இருக்கு?
அமைச்சர் ரகுபதி அதிமுக குறித்தும் என்னைப் பற்றியும் குறை கூறியுள்ளார். என்னைப் பற்றி சொல்ல அவர்களிடம் எதுவும் இல்லை. அதனால்தான் இப்படிச் செய்கிறார்கள்.
விசுவாசம் குறித்து அமைச்சர் ரகுபதி பேசுகிறார். விசுவாசம் குறித்து ரகுபதி பேச என்ன தகுதி இருக்கிறது. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தில் எம்எல்ஏ ஆனவர் நீங்கள். உங்களை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவர் அப்படி அடையாளம் கொடுத்ததால்தான் திமுகவில் நீங்கள் போய்ச் சேர இடம் கிடைத்தது. இன்று நன்றி மறந்து அதிமுக குறித்துப் பேச எந்த அருகதையும அவருக்குக் கிடையாது.
அதிமுகவைப் பொறுத்தவரை நான்தான் இறுதி. பாஜகவைப் பொறுத்தவரை அமித்ஷா சொல்வதே சரி. நாங்கள்தான் எந்த முடிவாக இருந்தாலும் எடுப்போம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அமித்ஷா கூறி விட்டார். செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்குவதாக இருந்தால் அதுகுறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
செந்தில் பாலாஜி வீடியோ
தனது பேட்டியின்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோவையும் போட்டுக் காட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}