பாரிஸ்: "Medical miracle" என்று நாம் அடிக்கடி ஜாலியாக கலாய்ப்போம் இல்லையா.. ஆனால் நிஜமான மெடிக்கல் மிராக்கிள் சம்பவம்.. பிரான்சில் நடந்துள்ளது. ஒரு பெண்ணின் அடி வயிற்றில் சிசு வளர்ந்தது தெரிய வந்து மருத்துவர்கள் வியப்படைந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, பாதுகாப்பாக டெலிவரி செய்து குழந்தையையும் தாயையும் காப்பாற்றியுள்ளனர் டாக்டர்கள்.
மருத்துவ உலகில் அவ்வப்போது சில அதிசயங்கள் நிகழும். அப்படிப்பட்ட அதிசயம் தான் தற்போது பிரான்ஸில் நடந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் தீவைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வயிறும் வீங்கத் தொடங்கியது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்றுள்ளார்.
பிரான்ஸ் மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முழுமையான பரிசோதனைகளைச் செய்தனர். அப்போதுதான், அந்தப் பெண்ணின் அடி வயிற்றில் கரு வளர்ந்திருந்தது தெரியவந்தது. இவ்வாறு வளரும் கரு மருத்துவ உலகில் "எக்டோபிக் கர்ப்பம்" என அழைக்கப்படும். இவ்வாறு ஆபத்தான இடத்தில் வளரும் கரு பெரும்பாலும் பிழைக்காது, இறந்து விடுவது வழக்கம்.

ஆனால் இந்த பெண்ணிற்கு அந்த கரு 29 வது வாரமாக வளர்ந்திருந்தது. இதையடுத்து அந்த குழந்தையை பாதுகாப்பான முறையில் டெலிவரி செய்து வெளியே கொண்டு வந்தனர் மருத்துவர்கள். 3 வாரங்கள் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருந்த குழந்தையும் அந்த பெண்ணும் தற்பொழுது நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர்.
வழக்கமாக இதுபோன்ற இயற்கைக்கு மாறான கர்ப்பத்தின்போது வயிறு உப்பி பல பிரச்சினைகளை தாய்மார்கள் சந்திக்க நேரிடும். குறிப்பாக வயிற்றுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் சிசு உயிரிழப்பது இயல்பானது. ஆனால் அதிர்ஷ்வடசமாக இப்பெண்ணின் குழந்தை உயிர் தப்பியுள்ளது. அதை விட முக்கியமாக பத்திரமாக வெளியேயும் வந்து விட்டது.
ஆனால் இதுபோல அரிதான கருத் தரிப்பு புதிதல்ல என்றும், இதற்கு முன்பு ஒரு பெண்ணின் கல்லீரலில் சிசு வளர்ந்த சம்பவம் நடந்துள்ளதாக, இந்த அரிய பிரசவத்தைப் பார்த்த மானிடோபா நகரின் சிறார் மருத்துவமனை ஆய்வுக் கழகத்தின் டாக்டர் மைக்கேல் நார்வே கூறியுள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}