புயல் பாதித்த மாவட்டங்களில்.. ஜனவரிக்குத் தள்ளிப் போகும் அரையாண்டு தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ்

Dec 04, 2024,05:59 PM IST

சென்னை: புயலால் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருப்பதால் அந்த மாவட்டங்களில் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்தாண்டும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. அரையாண்டு தேர்வு நெருங்கி வருவதை முன்னிட்டு மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.




இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  கனமழை பெய்து ஒரு வழி செய்து விட்டு போயுள்ளது. அதிலும் குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் புயல் தனது கோர தாண்டவத்தை காண்பித்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தற்போது நடத்து வருகின்றன. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு குறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பேசுகையில், அரையாண்டு தேர்வுகளுக்கான படங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், அந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுதுவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம். 


இது குறித்த அந்தந்தத பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்களை பொருத்தவரை மாணவர்களின் பாதுகாப்பு தான் முதலில். கண்டிப்பாக முறையான முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ப வடிவில் பிள்ளைகளை உட்கார வைத்தால்.. கழுத்து வலிக்காதா.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

news

ப வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வைக்கும் கோரிக்கை!

news

ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

news

அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு

news

விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

news

சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்