விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

Oct 04, 2025,05:17 PM IST

வேலூர்: விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள். ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை. ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த தவெக தலைவரின் பிரச்சாரத்தின் போது, 41 பேர் பலியான சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தவெக கட்சியின் தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பதில் கூற முடியாத சூழல் தவெகவிற்கு ஏற்பட்டுள்ளது. 




இந்த நிலையில், வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின். நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது இருந்த சூழல் வேறு; கரூரில் 41 பேர் பலியானது சாதாரணம் அல்ல. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது. 


விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள். ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை. ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார். ஒரு கட்சியின் தலைவர் அவரது கட்சிக்கேற்ப பேசுகிறார். கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை யாரும் குறை சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்