சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சர் கே என் நேருவும் உடல் நலக்குறைவால் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் அமைச்சர் கே என் நேரு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே அமைச்சர் கே என் நேரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மும்மரமாக கண்காணித்து வருகிறார். இதற்கிடையே இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அமைச்சருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனையடுத்து அமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அப்போலோ நிர்வாகத்தில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குந்திதேவி.. சோதனைகளையும் தியாகங்களையும் தாங்கி நின்ற தாயின் கதை!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் சபாநாயகர் தனபால் மருத்துவமனையில் அனுமதி: தொடரும் தீவிர சிகிச்சை
{{comments.comment}}