சென்னை: அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட அனைவரையும் விடுதலை செய்து எம்.பி., எல்.எல்.ஏ., க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் அப்போது துணைமேயராக இருந்த கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது. அப்போது, மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக எதிர்கட்சியாக இருந்த திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் அதிமுக உறுப்பினர்களான ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர்கம் சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது இரண்டு வழக்குகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு காவல்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு தூசி தட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் திர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றங்கள் எதுவும் சரிவர நிருபிக்கப்படாத காரணத்தினால், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுதலை செய்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}