சென்னை: ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.
அமைச்சர்கள் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு மற்றும் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் அவரது ராஜினாமா கடிதங்களை ஆளுநர் ஆர்.என் ரவி ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, புதிய அமைச்சராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத் துறையும், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், பால்வளத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதிதுறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றுக் கொண்டார். முன்பு பால்வளத்துறை அமைச்சராக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல அவருக்கு மீண்டும் அதே பால்வளத்துறையே ஒதுக்கப்பட்டுள்ளது.
பல் போன ரகசியம் (கலகல கதை)!
ஆணும் பெண்ணும் சமம்!
பேருந்து பயணத்தில் மறக்க முடியாத அனுபவம்!
காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே!
பைரவும் அபியும்!
சேலத்தில் களை கட்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் பெருவிழா
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
{{comments.comment}}