புதுச்சேரி: உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
உடல் பருமன் இன்றைய பெரும்பாலான மக்களுக்கு உள்ள பிரச்சனைகளிலில் ஒன்று. ஆண், பெண் என இரு பிரிவினர்களும் இந்த உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அவதி பட்டு வருகின்றனர். இதற்கு பல வகைகளில் தீர்வு உண்டு என்று கூறப்பட்டாலும், அவை ஆபத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. அப்படி தான் புதுச்சேரி முத்தியால்பேட்டை நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமசந்திரன் மற்றும் ஹேமராஜன் என 26 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 256 கிலோ உடைய ஹேமச்சந்திரனுக்கு நேற்று அறுவை சிகிச்சை வயிலாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க முடிவு செய்திருந்தனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கி 15 நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த இவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடல் பருமனை குறைக்க சென்றவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}