19ம் தேதி துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?.. வாயை விட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Aug 09, 2024,05:56 PM IST

ராமநாதபுரம்:   வருகிற 19ம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என அழைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் இது நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பற்றிப் பேசும்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறி விட்டு இப்போது சொல்லக் கூடாது, 19ம் தேதிக்குப் பிறகுதான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று கூறி விட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று தொடர்ந்தார்.




ராஜ கண்ணப்பனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான பேச்சாக, தவறுதலாக உச்சரித்ததாக இதை எடுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. காரணம், 19ம் தேதிக்குப் பிறகு என்று அவர் தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதைப் பார்த்தால், 19ம் தேதி அமைச்சரவை மாற்றம் நடக்கப் போகிறதா, அன்று துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கப் போகிறாரா என்ற பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜ கண்ணப்பன் வாய் தவறி இதைச் சொல்லியிருந்தாலும் கூட அவரது பேச்சு திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீண்ட நாளாகவே உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவுக்குள் இருந்து வருகிறது. சீனியர் அமைச்சர்கள் பலரும் கூட இதற்கு ஆதரவாகவே உள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார். அந்த சமயத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அதை முதல்வரும் சரி, உதயநிதியும் சரி உறுதிப்படுத்தப்படவில்லை. முதல்வரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் இன்னும் பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். உதயநிதியோ, முதல்வருக்கு எல்லா அமைச்சர்களுமே துணையாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.


ஆனால் இன்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பூனைக்கு மணி கட்டியுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது. எது எப்படியோ, 19ம் தேதி ஏதோ ஒன்று நடக்கப் போகுது.. அத்தனை கண்களும் இப்போது உதயநிதி ஸ்டாலின் பக்கம் போகஸ் ஆக ஆரம்பித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்